Chennai to Kochi Flight: சென்னை - கொச்சி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; 90 பயணிகளின் உயிர் தப்பியதால், நிம்மதி பெருமூச்சு.!
நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சென்னையில் இருந்து கொச்சி புறப்பட்ட விமானம், மீண்டும் சென்னையிலேயே தரையிறக்கப்பட்டது.
டிசம்பர் 09, மீனம்பாக்கம் விமான நிலையம் (Chennai News): சென்னை விமான (Chennai Airport) நிலையத்தின், உள்நாட்டு முனையத்தில் இருந்து, இன்று காலை சுமார் 06:30 மணியளவில், விமானம் ஒன்று 90 பயணிகளுடன் கொச்சிக்கு (Chennai to Kochi Flight) புறப்பட்டுச் சென்றது. விமானம் நடுவானில் பறந்துகொண்டு இருந்தபோது, விமானம் புறப்பட்ட 15 நிமிடங்களில் தொழில்நுட்ப (Flight Technical Issue) கோளாறை எதிர்கொண்டுள்ளது.
சென்னைக்கு திரும்பியது:
விமானத்தின் எஞ்சின் பகுதியில் கோளாறு ஏற்பட்டதாக விமானிகளுக்கு சமிக்கை கிடைக்கவே, அவர்கள் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளை தொடர்புகொண்டு தகவலை தெரியப்படுத்தி இருக்கின்றனர். விமான நிலைய அதிகாரிகள், உடனடியாக விமானத்தை சென்னைக்கு திரும்புமாறு அறிவுறுத்தியுள்ளனர். Gold Silver Price: தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு; ரூ.57 ஆயிரத்தை கடந்தது.!
பத்திரமாக தரையிறக்கம்:
அவசர தரையிறக்கத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு வாகனங்கள் தயார் நிலையில் இருக்க வைக்கப்பட்டன. 06:30 மணிக்கு புறப்பட்ட விமானம், மீண்டும் தொழில்நுட்ப கோளாறினைத் தொடர்ந்து 07:15 மணியளவில் சென்னையிலேயே தரையிறங்கியது.
பயணிகள் காத்திருப்பு:
நல்வாய்ப்பாக தொழில்நுட்ப கோளாறு கண்காணிக்கப்பட்டு, விமானம் விரைந்து தரையிறக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பயணிகள் அனைவரும் விமான நிறுவனத்தின் காத்திருப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். மற்றொரு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்கள் கொச்சிக்கு அனுப்பி வைக்கப்பட இருப்பதாக தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது.