IPL Auction 2025 Live

Benefits of Ponnanganni Keerai: கண் பிரச்சனை முதல் காசநோய் வரை.. பல உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வாகும் பொன்னாங்கண்ணி கீரை: நன்மைகள் விபரம் இதோ.!

கண் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள், எந்நேரமும் செல்போனை பயன்படுத்துபவர்கள், கணினியில் வேலை செய்பவர்கள், ஓட்டுனர்கள் பொன்னாங்கண்ணி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

Ponnanganni Keerai (Photo Credit: Wikipedia)

அக்டோபர் 12, சென்னை (Health Tips): நாம் அன்றாடம் சாப்பிடவேண்டிய உணவுகளில், கீரை உடலுக்கு பல நன்மைகளை வழங்கக்கூடியது. கீரைகளில் ராஜா கீரையாக கருதப்படும் பொன்னாங்கண்ணி (Ponnanganni Keerai), உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக செயல்படும். இது கீரைவகைகளில் மூலிகையாகவும் செயல்படுவதாலேயே கீரைகளின் ராஜா என்ற அடைமொழியையும் பெற்றது.

சித்தர்கள் எப்போதும் கீரையை போன்று நோயை சரிசெய்யும் வைத்தியன் இவ்வுலகில் இல்லை என குறிப்பிடுவார்கள். அதற்கேற்ப கீரைகள் தன்னகத்தே பல நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டவை ஆகும். பொன்னாங்கண்ணி (Alternanthera Sessilis) கீரையை மேனிக்கு பொன் போன்ற மினுமினுப்பை வழங்கும் என்பதால் பொன்னாங்கண்ணி என முன்னோர்கள் குறிப்பிட்டார்கள்.

நமது ஊர்களில் எளிதாக கிடைக்கும் பொன்னாங்கண்ணியில் சீமை, நாடு என இரண்டு வகை பொன்னாங்கண்ணி உள்ளன. சீமை பொன்னாங்கண்ணி அழகுக்காக வளர்க்கப்படும் செடி ஆகும். இதில் மருத்துவ குணம் என்பது குறைவே. பச்சை நிறத்தில் கிடைக்கும் நாட்டு பொன்னாங்கண்ணி மருத்துவத்திற்காக வளருபவை, பல சத்துக்களை கொண்டவை ஆகும். iPhone List with Offer Flipkart: ஐபோன் பிரியரா?.. ஐபோனை வாங்க நினைப்பவரா?.. பிளிப்கார்ட் பிக் பில்லியன்ஸ் டே-வில் அசத்தல் ஃஆபர். விபரம் உள்ளே.! 

பொன்னாங்கண்ணியில் (Brazilian Spinach) இருக்கும் இரும்புசத்து, கால்சியம், பாஸ்பிரஸ், புரதசத்து, வைட்டமின் ஏ,பி,சி போன்றவை உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. இதனை 27 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர, பகலில் கூட நட்சத்திரத்தை பார்க்கும் அளவு கண்களில் பார்வை மேம்படும்.

கண் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள், எந்நேரமும் செல்போனை பயன்படுத்துபவர்கள், கணினியில் வேலை செய்பவர்கள், ஓட்டுனர்கள் பொன்னாங்கண்ணி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது கண்பார்வையை அதிகரிக்க பேருதவி செய்யும். கண்ணாடி அணிவோர் கண்ணாடியை அணியத்தேவையில்லாத சூழ்நிலை உண்டாகும்.

காசநோய், இருமல், கண் சார்ந்த நோய்கள், வெப்ப நோய்கள், வாத நோய்கள் போன்றவையும் பொன்னாங்கண்ணி கீரையால் குணமாகும். இதனை அகத்தியரும் உறுதி செய்கிறார். குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்து பொன்னாங்கண்ணி கீரை கொடுப்பது நல்லது.

பொன்னாங்கண்ணி கீரையின் சாறெடுத்து, தேங்காய் எண்ணெயோடு சேர்த்து காய்ச்சி, மெழுகுப்பதம் வரும் வரை கொத்திவைத்து வடிகட்டி, இத்தைலத்தை தலையில் தேய்த்து குளித்து வர கண் புகைச்சல், உடற்சூடு பிரச்சனை சரியாகும். கண் பார்வை தெளிவாகும், உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.