Benefits Of Green Chilli Water: பச்சை மிளகாயை தண்ணீரில் ஊறவைத்து குடித்தால் கிடைக்கும் நன்மைகள்..!

உடல் எடையை குறைக்க உதவும் பச்சை மிளகாயின் பயன்கள் பற்றி இந்த பதிவில் காண்போம்.

Green Chilli | Water File pic (Photo Credit: Pixabay)

மே 07, சென்னை (Health Tips): பச்சை மிளகாய் நம் வீட்டின் சமையலறையில் எல்லா வகை உணவு பொருட்களிலும் காணப்படும். உணவின் சுவையை அதிகரிக்க இது பயன்படுகிறது. மேலும், உணவுக்கு காரமான சுவையை அளித்து, பல ஆரோக்கியமான நன்மைகளையும் தருகிறது. இதில் இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, தாமிரம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை அடங்கியுள்ளன. இருப்பினும், பச்சை மிளகாயை (Green Chilli Water) தண்ணீரில் ஊறவைத்து சில மணி நேரம் கழித்து, அந்த தண்ணீரை குடித்தால் அது நம் உடலுக்கு எவ்வளவு நன்மைகளை அளிக்கும் என்பதை பற்றி இதில் பார்ப்போம். Rohit Sharma Feeling Sad: மும்பை அணி வீரர் ரோஹித் சர்மா மனமுடைந்து காணப்பட்ட வீடியோ காட்சிகள் வைரல்..!

நன்மைகள்: பச்சை மிளகாயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்து உள்ளன. இது நம் உடலை பல வகையான நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது. இதில் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் என ஏராளமான சத்துகள் உள்ளன. இவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடல் நலத்தை மேம்படுத்துகிறது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்கிறது. பச்சை மிளகாய் (Pachai Milagai) நீர் இதய ஆரோக்கியத்தை பாதுகாத்து, உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. அதிக நார்ச்சத்து இதில் உள்ளது. இந்த நீர் செரிமானத்தை மேம்படுத்தவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.

செய்முறை: இரவில் தூங்க செல்வதற்கு முன்பு 4, 5 பச்சை மிளகாயை நன்றாக கழுவி, மிளகாயின் நடுவில் நறுக்கிக்கொள்ள வேண்டும். பின்னர், நறுக்கி வைத்துள்ள மிளகாயை குறைந்தது ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைக்கவும். பின், இந்த தண்ணீரை தினமும் காலையில் பருகி வந்தால் நல்ல பயனளிக்கும். குறிப்பாக, இதனை குடிப்பதற்கு முன்பு வேறு எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது.