மே 07, மும்பை (Sports News): ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 55-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் (MI Vs SRH) அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மும்பை அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. பின்னர், முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில், 8 விக்கெட்களை இழந்து 173 ரன்களை குவித்தது. A Man Money Fraud Case Arrested: பண மோசடியில் ஈடுபட்டவர் கைது - விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணியில், தொடக்க ஆட்டகாரர் ரோஹித் ஷர்மா சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர், களமிறங்கிய வீரர்கள் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 102 ரன்களை குவித்தார். இறுதியில், மும்பை அணி 17.2 ஓவர்களில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை சதம் அடித்த சூர்யா குமார் யாதவ் பெற்றுச் சென்றார்.

இதனிடையே கடந்த சில போட்டிகளில் தொடர்ந்து இதுபோல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியதால்,  ரோஹித் சர்மா  மனமுடைந்து டிரஸ்ஸிங் அறையில் (Rohit Sharma Sad Feeling) அழுது கொண்டிருந்தாரா? என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதன் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.