Pot Water Benefits: மண்பானை தண்ணீரை பருகுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

மேலும், விவரங்களைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Pot (Photo Credit: Pixabay)

மார்ச் 19, சென்னை (Health Tips): தமிழகத்தில் தற்போது கோடை வெயில் அதிகமாகி வரும் வேளையில், எல்லோருக்கும் அடிக்கடி தண்ணீர் தாகம் எடுக்கிறது. கொளுத்தும் வெயிலுக்கு நாக்கு வறண்டு போகிறது. இதனை தணிக்க குளிர்ந்த நீரை தேடிச் செல்கிறோம். இதற்கு மாற்றாக மண்பானையில் தண்ணீர் குடிப்பதன் மூலம் குளிர்ந்த நீராகவும், மேலும் பல நன்மைகளும் அதில் கிடைக்கிறது. இதைப்பற்றி முழுமையாக இந்த பதிவில் காண்போம். Earthquake In Afghanistan: ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.3 என பதிவு..!

மண்பானையில் தண்ணீரை ஊற்றி வைத்து சுமார் 5 மணிநேரம் கழித்து தண்ணீரை பருகும்போது மண்பானை அதில் உள்ள மாசுகளை உறிஞ்சி எடுத்து சுத்தமான மற்றும் குளிர்ந்த நீரை நமக்கு அளிக்கிறது. இதில் உள்ள கனிம தாதுக்கள் கிடைக்கும் போது ஜீரண சக்தி, நோய் எதிர்ப்பு சக்தி போன்றவை நமக்கு கிடைக்கிறது. ஐஸ் தண்ணீர் குடிப்பதால் தொண்டை மற்றும் உடலுக்கு பலவிதமான நோய்கள் வர வாய்ப்புள்ளது. எனவே, மண்பானையில் உள்ள குளிர்ந்த நீரை பருகுவதால் அதன் மூலம் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கின்றது. மேலும், குழந்தைகள் இந்த நீரை பருகினால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.

இந்நிலையில் கோடைக்காலத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மண்பானைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தற்போது, மதுரையில் உள்ள ஆரப்பாளையம் பகுதியில் மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் பலவிதமான வகையில் மண்பானைகளை செய்து வருகின்றனர். ஆரம்ப விலையாக ரூ.300-ல் இருந்து விற்க்கப்படுகின்றன.