Earthquake File Pic (Photo Credit: Twitter)

மார்ச் 19, காபூல் (World News): ஆப்கானிஸ்தானில் திடீரென இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 6 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இது ரிக்டர் அளவில் 5.3 என பதிவானதாகவும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Actress Bike Accident: நடிகை அருந்ததி நாயருக்கு தீவிர சிகிச்சை – விபத்தில் சிக்கி படுகாயம்..!

மேலும், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரின் தெற்கே தென்மேற்கு திசையில் சுமார் 632 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாகிஸ்தானின் அருகே பாலோசிஸ்தானின் நுஷ்கி பகுதியிருந்து சுமார் 65 கிலோமீட்டர் தொலைவிலும் நிலநடுக்கத்தின் மையம் அமைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தின் மையப்பகுதி 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததால், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், எந்த சேதமும் பெரியதாக ஏற்படவில்லை என தகவல்கள் கிடைக்கின்றன. இதற்கு முன்னதாகவே ஆப்கானிஸ்தானில் கடந்த 17-ஆம் தேதி மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.