Honey Benefits: அடேங்கப்பா.. தேனில் இவ்வுளவு நன்மைகளா?.. அசத்தல் நன்மைகளை தரும் தேனின் மகத்துவம் அறிவோம்.!
நம்மை விட மிகச்சிறிய அளவை கொண்டு குவியல் போல தேனை சேமித்து நமது உடலை பாதுகாக்க தேன் வழங்கும் தேனீக்கள் சுறுசுறுப்பானவையும் கூட.
டிசம்பர், 11: இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு உயிருக்கும் இயற்கை பல கொடைகளை வழங்குவதால் நாம் உயிர்ப்புடன் வாழ்ந்து வருகிறோம். நமக்கு கிடைக்கும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு உடலுக்கு தேவையான சத்துக்களை பெறுகிறோம். அந்த வகையில், நம்மை விட மிகச்சிறிய அளவை கொண்டு குவியல் போல தேனை சேமித்து நமது உடலை பாதுகாக்க தேன் (Honey) வழங்கும் தேனீக்கள் (Honey Bee) சுறுசுறுப்பானவையும் கூட.
அவை சேமிக்கும் தேனும் அதன் சுறுசுறுப்புகளுக்கு ஏற்றாற்போல நமது உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்கும் மருத்துவ குணம் கொண்ட தேன் பல நோய்களை குணப்படுத்துகிறது. இதனை வயிற்றுக்கு நல்ல நண்பன் என்றும் கூறலாம். தேனில் 70க்கும் அதிகமான வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் இயற்கையாகவே நிறைந்துள்ளன. இன்றளவில் தேன் கலப்படம் காரணமாக அவற்றின் மகத்துவம் மறைந்து வருகிறது.
ஆனால், கிராமப்புறங்களில் சுத்தமான தேன் மரத்தில் இருந்து இறக்கி நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த தேனிலேயே மருத்துவ குணங்கள் நிறைந்து கிடக்கின்றன. தேன் ஆண்டுக்கணக்கில் காற்றுப்புகாத ஜாடியில் வைத்து முறையாக பராமரித்து உபயோகம் செய்ய சிறந்தது. அது விரைவில் கெட்டுவிடாது. தேனில் இருக்கும் மருத்துவ குணங்கள் குறித்து இனி நாம் தெரிந்துகொள்ளலாம். December Month Birth CineStars: டிசம்பர் மாதத்தில் பிறந்து இந்திய அளவில் சாதனை புரிந்த திரைத்துறை நட்சத்திரங்கள் யார் யார்?..!
தேன் குடித்தால் உணவு செரிமானத்தன்மை மேம்படுத்தப்பட்டு, மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும். சிறுவயது & இளவயது குழந்தைகளுக்கு தினம் தேன் கொடுத்து வந்தால் கால்சியம், மக்னீசிய சத்துக்கள் கிடைக்கப்பெற்று, அவர்கள் உடல் வலிமையுடன் இருப்பார்கள். தோல் நோய்கள், கண் நோய் போன்றவற்றுக்கும் தேன் மருந்தாக அமைகிறது. வெங்காயத்தை அரைத்து சாறாக்கி தேனுடன் கலந்து குடிக்க கண்பார்வை தெளிவாகும்.
இளஞ்சூடுள்ள நீருடன் எலுமிச்சை சாறு + தேன் கலந்து குடித்தால் வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி போன்ற பிரச்சனைகள் குணமாகும். தேனில் இருக்கும் குளுக்கோஸ் சத்து சிறிய அளவிலான இரத்த நாளத்தினை விரிவடைய செய்யும். இரத்த ஓட்டத்தினை சீராக்கும். இதய பாதிப்புகள் தடுக்கப்படும். தேனுடன் முட்டை & பால் கலந்து சாப்பிட ஆஸ்துமா நோயின் தாக்கம் குறையும்.
மூட்டு வலி இருக்கும் நபர்கள் வலி இருக்கும் இடத்தில் தேனை தடவி மசாஜ் செய்ய வேண்டும். தினமும் ஒரு கரண்டி தேன் சாப்பிட வேண்டும். தேனோடு இஞ்சி, பேரிச்சம்பழம் போன்றவற்றை ஊறவைத்து சாப்பிட்டால் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும். தேன் + மாதுளைப்பழ சாறு குடித்தால் இதய நோய்கள் சீராகும்.
Note: இன்றளவில் கடைகளில் அதிகளவு கலப்பட தேன் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கையான தேன் மட்டுமே மேற்கூறிய நன்மைகளை தரும். சர்க்கரை பாவு அதனை தராது. தேனை ஒரு பாத்திரத்தில் நீர் வைத்துக்கொண்டு அதனுள் துளியளவு விட்டு கரைந்துவிடும் பட்சத்தில் அது சர்க்கரை பாவு ஆகும். நயம் இயற்கை தேன் கரையாது.