Ladies Finger: அடேங்கப்பா.. வெண்டைக்காயில் இருக்கும் நன்மைகள் இவ்வுளவா??.. அசத்தல் தகவல்கள் உங்களுக்காக இதோ.!
நார்சத்து கிடைக்கும். இரத்தத்தில் இருக்கும் கொழுப்பு கரைக்கப்படும். மாரடைப்பு ஏற்படாமல் உடல்நலம் பாதுகாக்கப்படும்.
டிசம்பர், 9: வெண்டைக்காய் (Ladies Finger) அனைவர்க்கும் பிடித்த காய்கறிகளில் ஒன்றாகும். இதன் வழவழப்புத்தன்மை பலருக்கும் பிடிக்காது என்றாலும், அதனை பக்குவப்படுத்தி சமைத்து கொடுத்தால் விரும்பி உண்ணுவார்கள். வெண்டைக்காய் சாப்பிடுவதால் ஞாபக சக்தி அதிகரிக்கப்படும். நார்சத்து கிடைக்கும்.
இரத்தத்தில் இருக்கும் கொழுப்பு கரைக்கப்படும். மாரடைப்பு (Heart Attack) ஏற்படாமல் உடல்நலம் பாதுகாக்கப்படும். வெண்டைக்காயில் இருக்கும் கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் இ, வைட்டமின் கே, கால்சியம், இரும்புசத்து போன்றவை உடலுக்கு பல நன்மைகளை தருகிறது.
இதனால் அறிவு வளர்ச்சி ஏற்படுகிறது. இரத்த சோகை, மூச்சிரைப்பு, மலச்சிக்கல், புற்றுநோய், வயிற்றுப்புண், பார்வை கோளாறு என பல பிரச்சனைக்கும் மருந்தாக அமைகிறது. பல மருத்துவ குணங்கள் கொண்ட வெண்டைக்காயில் இருக்கும் நீர்சத்து திரவ இழப்பை தடுக்கும். உடலை குளிர்ச்சியாக்கும். இதய நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்தை குறைக்கும். Largest State India: அடேங்கப்பா.. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்கள் எவை?.. அசத்தல் தகவல் இதோ.!
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான போலிக் அமிலத்தை வழங்கும். இதன் வழவழப்பு தன்மையால் அல்சர் பிரச்சனையால் பாதிக்கப்பட்டோருக்கு விடுதலை கிடைக்கும். மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வயிற்று உபாதை என அனைத்தையும் குணப்படுத்தும். பிஞ்சு வெண்டைக்காய் சாப்பிட்டு வர புற்றுநோய் ஆபத்து குறையும். பாக்டீரியாவை கட்டுப்படுத்தும்.
நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது வெண்டைக்காய் சாப்பிட்டு வர இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு குறையும். கல்லீரலின் நல்ல செயல்பாட்டுக்கு வெண்டைக்காய் பேருதவி செய்கிறது. இதனை அடிக்கடி சாப்பிட்டு வர பசி உணர்வு கட்டுப்படுத்தப்படும். உடல் எடை குறையும். வெண்டைக்காயை ஊறவைத்து அந்நீரை குடித்தால் குடல் இயக்க பிரச்சனை சரியாகும். மலச்சிக்கல் சரியாகும். சுவாச கோளாறு பிரச்சனைகள் குறையும்.