IPL Auction 2025 Live

Benefits of Nuts: உடல் ஆரோக்கியம் மேம்பட கட்டாயம் நாம் சாப்பிடவேண்டிய 4 பருப்புவகைகள் இவைகள் தான்..!

நமது உடல் - ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பருப்பு வகை உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

Almond-Cashew (Photo Credit: Pixabay)

டிசம்பர், 22: தினமும் அல்லது வாரத்திற்கு ஒருமுறையாவது கட்டாயம் சாப்பிடவேண்டிய பருப்புகளும் (Dals & Nuts), அவற்றின் ஆரோக்கிய பலன்கள் குறித்தும் இன்று தெரிந்துகொள்ளலாம். நமது உடல் - ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பருப்பு வகை உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பருப்பு வகை உணவுகளை எடுத்துக்கொள்வதால் மூளையின் செயல்திறன் என்பது அதிகரிக்கிறது. இதயத்தின் ஆரோக்கியத்திற்கு வழிவகை செய்கிறது. எலும்புகளுக்கு வலிமை சேர்க்கிறது. உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பேருதவி செய்கிறது.

1. பாதாம் பருப்பு: நமது மூளையின் செயல்திறனை அதிகரிக்க பாதாம் பருப்பு உதவி செய்கிறது. டோபமைன் ஹார்மோன் என்பது உற்பத்தி செய்து மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இரவு நேரத்தில் பாதாம்பருப்பை ஊறவைத்து காலையில் சாப்பிட வேண்டும்.

2. நிலக்கடலை: வடநாட்டு வழக்கில் மல்லாட்டை என்று அழைக்கப்படும் நிலக்கடைலையை வறுத்து, வேகவைத்து கிடைக்கும் நன்மையை விட, பச்சையான நிலக்கடலையில் அதிகளவு நன்மை என்பது இருக்கிறது. இளமையான சருமம் பெற நாம் நிலக்கடலை சாப்பிடலாம். மன அழுத்தம் இருக்கும் நோயாளிகளுக்கு நிலக்கடலை பேருதவி செய்யும். நினைவுத்திறனும் மேம்படும்.

3. முந்திரி பருப்பு: உலகளவில் பிற பருப்பு வகைகளை விட தனக்கென தனியொரு இடம்பெற்ற முந்திரியில் கொழுப்பு அதிகளவு இருந்தாலும், அதனை அளவோடு எடுத்துக்கொண்டால் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது ஆகும்.

4. பிஸ்தா & வால்நட்: தன்னகத்தே பல நன்மைகளை கொண்ட பிஸ்தாவும், ஒமேகா 3 அமிலம் கொண்ட வால்நட்டும் உடலுக்கு பல்வேறு நன்மைகளை செய்கிறது. வால்நட் இதய கோளாறுகளை தடுக்கும் வல்லமை கொண்டது ஆகும்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 22, 2022 07:45 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).