Benefits Of Sapodilla: கண்கள், எலும்புகள் ஆரோக்கியம் பெற, பதற்றம் குறைய இன்றே சுவையான சப்போட்டா சாப்பிடுங்கள்..!

இதனை சாப்பிடுவது உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்க வழிவகை செய்கிறது.

Sapodilla (PC: Pixabay)

டிசம்பர், 22: அக்டோபர் - நவம்பர், பிப்ரவரி - மார்ச் மாதங்களில் எளிதில் கிடைக்கும் சப்போட்டாவில் (Sapodilla Fruit) பல நன்மைகள் நிறைந்து கிடக்கின்றன. இதனை சாப்பிடுவது உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்க வழிவகை செய்கிறது.

சீசன் காலங்களில் கிடைக்கும் சப்போட்டா பழத்தில் இருக்கும் ஆன்டி-ஆக்சிடன்ட் தோல்களில் சுருக்கம் ஏற்படாமல் பாதுகாக்கும். இளமையான தோற்றமும் கிடைக்கும். சப்போட்டா பழத்தை விழுதுபோல அரைத்து நல்லெண்ணெய் சேர்த்து, இரவில் மண்டையோட்டில் தேய்த்து மறுநாள் தலைக்கு குளிக்க, தலைமுடி மென்மையை பெறும்; பொடுகு நீங்கும்.

நமது கூர்மையான கண்பார்வை பெற சப்போட்டா பழத்தை சாப்பிடலாம். இதனால் வயது முதிர்ந்த காலத்திலும் சிறந்த கண்பார்வை பெற இயலும். நமது கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க தேவைப்படும் வைட்டமின் ஏ சத்து சப்போட்டாவில் நிறைந்து காணப்படுகிறது.

எலும்புகள் ஆரோக்கியம் பெற தேவைப்படும் கால்சியம், இரும்புசத்து, பாஸ்பிரஸ் சத்து சப்போட்டாவில் உள்ளது. மலச்சிக்கல் பிரச்சனை நீங்க தேவைப்படும் நார்ச்சத்தும் சப்போட்டாவில் இருப்பதால், உடல் நலம் பாதுகாக்கப்டுகிறது. குடலின் ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் சப்போட்டாவை சாப்பிடுவது உடலுக்கும், மனதுக்கும் நல்லது. தூக்கமின்மை, பதற்றம், மன அழுத்தம் போன்றவையும் குறையும்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 22, 2022 08:22 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).