Health Tips: அன்றாடம் சாப்பிடும் கீரையில் நிறைந்துள்ள சத்துக்கள் எவை?.. புள்ளி விபரத்துடன் தெரிந்துகொள்ளுங்கள்.!
அகத்திக்கீரையில் 1130 மி.கி கால்சியம், 3.9 மி.கி வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளது. இது உடலுக்கு பல நன்மைகளை செய்கிறது.
ஜூன் 03, சென்னை (Health Tips): கீரைகளில் உள்ள பல சத்துக்கள் மனிதனுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. நாம் தினமும் சாப்பிடும் புதினா மற்றும் கொத்தமல்லியில் எவ்வுளவு சத்துக்கள் உள்ளது என்பதை என்றாவது நினைத்து பார்த்ததுண்டா?.
இன்று நாம் சாப்பிடும் புதினா மற்றும் கொத்தமல்லியில் எவ்வுளவு சத்துக்கள் உள்ளது என்பதை நாம் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம். புதினாவின் 114 மைக்ரோ கிராம் போலிக் அமிலம், 200 மி.கி கால்சியம், 15.6 மி.கி இரும்புசத்து, வைட்டமின்கள் ஏ, பி, சி உள்ளது. இது இரத்த சோகை பிரச்சனையை சரி செய்யும். Train Accident: ஒடிசா இரயில் விபத்தில் தமிழர்களும் பலி?.. இழப்பீடு அறிவித்த முதல்வர் மு.க ஸ்டாலின்..!
கொத்தமல்லியில் 184 மி.கி கால்சியம், 1042 மி.கி இரும்புசத்து, 8919 மி.கி வைட்டமின் ஏ இருக்கிறது. இதைதவிர்த்து பசுபிராஸ் மற்றும் வைட்டமின் பி,சி இருக்கிறது. இதனால் பார்வைக்கோளாறு, இரத்த சோகை போன்றவை சரியாகும்.
முளைக்கீரையை 22.9 மி.கி இரும்புசத்து, 397 மி.கி கால்சியம், பாஸ்பிரஸ், வைட்டமின் ஏ, பி, சி இருக்கின்றது. இது இரத்த சோகை பிரச்சனையை சரி செய்யும். அகத்திக்கீரையில் 1130 மி.கி கால்சியம், 3.9 மி.கி வைட்டமின் ஏ சத்து உள்ளது. பசலைக்கீரையில் 580 மி.கி வைட்டமின் ஏ5, 1.14 மி.கி கால்சியம், பாஸ்பிரஸ், இரும்புசத்து, 306 மி.கி பொட்டாசியம் இருக்கிறது.