Premature Babies: குறைபிரசவத்தில் பிறந்து இறக்கும் குழந்தைகள்.. காரணமும், தீர்வும் என்ன?..!
மனித உயிர்களின் பிறப்புக்கு 10 மாதங்கள் / 37 வாரங்கள் தேவைப்படும்.
டிசம்பர், 10: மனிதனின் பிறப்பு பெண்ணின் கருப்பையில் இருந்து தோன்றுகிறது. இது உலகறிந்த விஷயம். ஒவ்வொரு உயிரினத்திற்கும் கருவுறும் காலம் (Pregnancy Period) என்பது வேறுபடும். மனித உயிர்களின் பிறப்புக்கு 10 மாதங்கள் / 37 வாரங்கள் தேவைப்படும். மனிதனின் கரு முழுமையான வளர்ச்சி பெற்று பிரசவம் நிகழ்ந்து குழந்தை பிறக்கிறது.
இடையில் இருக்கும் காலங்களில் குழந்தைகளுக்கு பல பாதிப்புகளும் ஏற்படலாம். அதனால் கருக்காலம் நிறைவு பெரும் முன்னரே குழந்தை பிறந்து குறைபிரசவத்தில் குழந்தை வளருகிறது. இவ்வாறான குறை பிரசவத்தினால் குழந்தைகளுடைய உடல் உறுப்புக்கள் அதிகளவு பாதிக்கப்படுகின்றன.
புதிதாக பிறக்கும் பச்சிளம் குழந்தைகளின் மரணத்திற்கு குறைப்பிரசவமும் காரணியாக அமைகிறது. இறுதிக்கட்டத்தில் குழந்தையின் நுரையீரல் விருத்தியடையாமல் பாதிக்கப்படுகிறது. இதனால் குறைப்பிரசவம் கொண்டு பிறக்கும் குழந்தைகள் செயற்கை சுவாச கருவியின் உதவியால் சில நாட்கள் உயிர்வாழ்கின்றன. Benefits of Trikadugam: அடேங்கப்பா.. இயற்கை மருத்துவராக திரிகடுகம்.. அசத்தல் நன்மைகள் இதோ.. தயாரிப்பு முறையும் சுலபம்.!
பெண்ணின் கருவில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உருவாகுதல், சேர்க்கை கருத்தரிப்பு, கர்ப்பகால இரத்த சோகை, சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், எளிதில் நோய்வாய்ப்படுத்தல் போன்றவையும் குறைபிரசவத்தின் காரணியாக அமைகின்றது.
கருவுறும் முன்னரே பெண் தனது உடல்நிலையை பரிசோதனை செய்து கருவுறுதலுக்கு தயாராகுவது, ஆணின் விந்தணு தரத்தை சோதனை செய்துகொள்வது, கர்ப்பகாலத்தில் சத்துக்களை தரும் உணவுகளை சாப்பிட்டு நோய்வாய்ப்படாமல் இருப்பது, தினமும் உடலுக்கு தேவையான நீர் குடிப்பது போன்றவை குறைபிரசவத்தை குறைக்க வழிவகை செய்யும்.