Curd Benefits: அடடே.. தயிருடன் இதனை கலந்து சாப்பிட்டால் இவ்வுளவு நன்மைகளா?.. இவ்வுளவு நாளாக தெரியாமல் போய்விட்டதா மக்களே., சுதாரிச்சுக்கோங்க.!

பாலினை குடித்தால் மணிக்கு 32% அளவே அது ஜீரணமாகியிருக்கும்.

Template: Curd & Pepper

டிசம்பர், 8: நாம் சாப்பிடும் பாலினை விட தயிர் (Curd) உடலுக்கு பல ஆரோக்கியத்தை வழங்கும் சிறப்பான இடத்தை பெற்றது ஆகும். தயிரில் இருக்கும் புரோட்டீன், பாலில் இடம்பெற்ற புரோட்டீனை விட விரைவில் ஜீரணமாகும் சக்தி கொண்டது. பாலினை குடித்தால் மணிக்கு 32% அளவே அது ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிரோ சாப்பிட்ட 1 மணிநேரத்தில் 91% ஜீரணத்தை அடைந்திருக்கும்.

நோய்கிருமிகள் வளர்ச்சியை தடுக்க: பாலினை தயிராக மாற்றம் செய்யும் பாக்டீரியா, நமது குடலில் உருவாகும் தேவையற்ற நோய்கிருமியின் வளர்ச்சியை தடுக்கும். அதேவேளையில், தயிரில் உள்ள பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும். உடலுக்கு பல நன்மையை செய்யும் பாக்டீரியாவாக அது மாறும். தினமும் உணவின் அங்கமாக தயிரை எடுத்துக்கொள்ளலாம். இதனால் பல நன்மைகளும் கிடைக்கும். Largest Rivers India: இந்தியாவில் இருக்கும் நீளமான ஆறுகள் என்னென்ன?.. அசத்தல் லிஸ்ட் இதோ.. தெரிஞ்சுக்கோங்க..! 

Curd

ஊட்டச்சத்து கிடைக்க: தயிரில் நிறைந்திருக்கும் வைட்டமின் பி12, பாஸ்பிரஸ், கால்சியம், மெக்னீசியம், தாது உப்பு போன்றவை உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்து ஆகும். கால்சியம் எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு வழிவகை செய்யும். நமக்கு மன அழுத்தம் மற்றும் சோர்வினை ஏற்படுத்தும் கார்டிசோல் ஹார்மோனை தயிர் கட்டுப்படுத்தும்.

தயிருடன் தேன்: தயிரை மதிய வேளையில் சாப்பிடலாம். இரவு நேரத்தில் அதனை எடுத்துக்கொள்ள கூடாது. தயிரோடு சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்தால் செரிமானம் அதிகரிக்கும். தயிருடன் தேனை கலந்து சாப்பிட்டால் வாய்புண், பற்களில் ஏற்படும் வலி போன்றவை சரியாகும். தயிரோடு ஓமத்தினை சேர்த்து சாப்பிட நெஞ்சு எரிச்சல் சரியாகும். சிறுநீரக பிரச்சனையில் இருந்த விடுதலை கிடைக்கும். மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும். முதுமை தடுக்கப்படும்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 8, 2022 04:43 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).