Rainy Season Foods: மழைக்காலத்தில் இந்த காய்கறிகளை சமைத்து சாப்பிடுறீங்களா?.. அச்சச்சோ ரொம்ப ஆபத்து.. உங்களுக்குத்தான் எச்சரிக்கை.!
இக்காலங்களில் நாம் நமக்கு பிடித்த உணவுகளை பிடித்த விதத்தில் செய்து சாப்பிடுவோம். ஆனால், நாம் மழைக்காலத்தில் சாப்பிடக்கூடாத காய்கறிகள் தொடர்பான விபரங்கள் இருக்கிறது.
டிசம்பர், 10: மழைக்காலம் (Rainy Season) என்றாலே நம்மவர்களுக்கு குதூகலம் தான் என்பதை போல, குட்டிஸ்க்கு விடுமுறை நாட்கள் தானாக வந்துவிடும். அவர்கள் வீடுகளில் இருக்கும் நேரங்களில் ஏதேனும் விசேஷமாக செய்து கேட்பார்கள். அதேபோல, மழைக்கு இதமாக நாமும் எதையாவது வித்தியாசமாக செய்து சாப்பிடலாம் என இருப்போம். மேலும், இக்காலங்களில் நாம் நமக்கு பிடித்த உணவுகளை பிடித்த விதத்தில் செய்து சாப்பிடுவோம்.
ஆனால், நாம் மழைக்காலத்தில் சாப்பிடக்கூடாத காய்கறிகள் (Vegetables) தொடர்பான விபரங்கள் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? அதனை எதற்காக மழைக்காலத்தில் சாப்பிட கூடாது என கூறுகிறார்கள்? என இன்று விரிவாக தெரிந்துகொள்ளுங்கள். மழை காலங்களில் பாக்டீரியா & பூஞ்சைகள் அதிகளவில் வளரும். நாம் மழையில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய காய்கறியில் சுவையாக வேண்டும் என செய்து சாப்பிடும் உணவுகள் உடல் உபாதையை ஏற்படுத்தலாம்.
மழை & குளிர்காலங்களில் பொதுவாக நுண்ணுயிர்கள், பாக்டீரியாக்கள் எளிதில் வளரும். இவை உடல் நலத்தை கேள்விக்குறியாக்கும். இக்காலங்களில் ஊட்டச்சத்துள்ள பிற வகை உணவுகளை நாம் சாப்பிட்ட தயார் செய்தாலும், அதனை 30 நிமிடங்கள் நீரில் கொதிக்க வைப்பது நல்லது. Contraceptive Treatment: ஆண்களுக்கும் கருத்தடை சிகிச்சை.. 20 நிமிடத்தில் துண்டிக்கப்பட்டாலும் மீண்டும் இணைக்கலாம்.. தெரிஞ்சிக்கோங்க பாஸ்.!
காலிப்ளவர் (Cauliflower): காலிஃபிளவரில் காணப்படும் குளுகோசினேளேட்கள் உடல் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். மழைக்காலங்களில் சுவையாக பக்கோடா செய்யலாம் என்று காலிபிளவரை தேர்வு செய்தால், சென்சிடிவ் திறன் கொண்டவர்களுக்கு அவை சிக்கலை ஏற்படுத்தும். இதனால் மழைக்காலங்களில் காலிபிளவரை தவிர்ப்பது சிறந்தது.
குடை மிளகாய் (Capsicums): குடைமிளகாயிலும் குளுகோசினேளேடுகள் இருக்கின்றன. இதனை மழைக்காலங்களில் சமைக்கும் போது ஐசோதியோசையென்டுகளாக மாறுகிறது. இதனால் குடை மிளகாயை சாப்பிடும் போது குமட்டல், வாந்தி, வயிற்று பிரச்சனை, சுவாச கோளாறு போன்றவையும் நிகழும்.
கத்தரிக்காய் (Brinjal): கத்தரிக்காயில் காணப்படும் ஆல்கலாய்டு பூச்சிகள், பிற பூச்சிகளுக்கு எதிராக செயல்பட இரசாயனத்தை உற்பத்தி செய்யும். மழைக்காலத்தில் கைத்தறியில் இருக்கும் ஆல்கலாய்த்து உடலில் ஒவ்வாமை, படை நோய், தோல் அரிப்பு, குமட்டல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.