Astrology: திக்., திக்.. 2025ம் ஆண்டில் தமிழகத்தின் நிலை எப்படி? அரசியல் மாற்றம் முதல் சிலிண்டர் பேராபத்து வரை.. ஜோதிடர் கணிப்பு.!
2025ம் ஆண்டில் உலக அளவில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படுவதற்கான தொடக்கமாக அமையும் அரிய ஜோதிட நிகழ்வாகும்.
டிசம்பர் 30, சென்னை (Astrology Tips): ஜோதிடர் சரபேஸ்வரன் முத்துகுமார் கணிப்பின்படி, 2025 என்பது செவ்வாயின் ஆதிக்கத்தை குறிப்பதால், சிவப்பு நிற பொருட்கள் பலிதம் ஆகும். அதிகமான விளைச்சலை உண்டாக்கும் தக்காளி மற்றும் வத்தல் விலை வீழ்ச்சி அடையும். உலகில் அதிகமாக தக்காளி, வத்தல் மற்றும் சிவப்பு நிற பழங்கள் உற்பத்தி அதிகரிக்கும். விலை மலிவாக கிடைக்கும். வீதிகளில் தக்காளி கொட்டப்படும். வத்தல் விலை மலிவாக கிடைக்கும். சிவப்பு நிற பழங்களின் விலையும் குறையும். துவரம் பருப்பு விலை குறைவதற்கும் வாய்ப்பு இருக்கிறது துவரம் பருப்பு அதிகமான விளைச்சலை தரக்கூடிய அமைப்பு இருக்கின்றது.
2025 ஆம் ஆண்டிற்கான பலன்கள்:
இந்தியாவில் ஏன் உலக அளவில் தமிழ்நாட்டில் சில முக்கியமான அரசியல் ரீதியான முடிவுகள் எடுக்கப்படும். உலக அரங்கில் தமிழ்நாடு குறிப்பிடக் கூடிய ஒரு முன்னேற்றத்தை அடையும் அல்லது பேசு பொருளாகும். தற்போது இந்த ஆண்டு நீரினால், மழையினால், வெள்ளப் பெருக்கினால் துன்பங்களை அடைகிறோம். அடுத்த ஆண்டு நெருப்பினால், விபத்துகளினால் மிகப் பெரிய அளவு சேதங்கள், சேதாரங்கள் ஏற்படும். ஃபேக்டரிகள், ரசாயன தொழிற்சாலைகள் வெடித்து சிதறும். கேஸ் சிலிண்டர்களில் கவனம் தேவை. கேஸ் சிலிண்டர் வெடிப்புகள் ஆங்காங்கே நடைபெறும். கற்பழிப்பு குற்றங்கள் அதிகரிக்கும் கொலை கொள்ளை திருட்டு சம்பவங்கள் அதிகரிக்கும். New Year 2025: புத்தாண்டு அன்று தமிழ்நாட்டில் பார்க்க வேண்டிய இடங்கள்; இனிய 2025 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மக்களே..!
நம் நாட்டிற்கான பலன்கள்:
தமிழகத்தில் உள்ள முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளும் புதுப்பொலிவு பெறும். முருகப்பெருமான்களின் கோயில்கள் அனைத்திலும் வளர்ச்சிப் பணிகள் மேலோங்கும். விளையாட்டுத் துறை மேம்படும். இந்திய அளவில் ராணுவத்திற்காக, ஆயுத தளவாடங்கள் அதிக அளவில் கொள்முதல் செய்யப்படும். நெருப்பினால் சேதங்கள் அதிக அளவில் ஏற்படும். முருகப்பெருமானின் பெயர்களை வைத்திருப்பவர்களின் புகழ் அவரவர் சக்திக்கு தகுந்தபடி பரவும். புகழ்பெருமை ஓங்கும். அதிக அளவில் காவல் துறை மற்றும் இராணுவத்திற்கு ஆட்களை தேர்வு செய்வார்கள். அரசியல் களம் தமிழகத்தில், பரபரப்பாக இருக்கும் அரசுப் பணிகளில் அதிகமானோர் தேர்ந்தெடுக்கப்படுவர். காவல்துறை மற்றும் ராணுவத்தில் புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படும் காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினருக்கான புதிய சலுகைகள் மற்றும் அந்த துறைகள் விரிவுபடுத்தப்படும். தமிழக அரசியலில் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பாக பேசப்பட்டு முக்கியஸ்தராக அறியப்படுவார். New Year 2025: "மகிழ்ச்சி பெருக.. மனிதநேயம் சிறக்க.." - புத்தாண்டு பண்டிகை 2025 வாழ்த்துச் செய்தி இதோ..!
உலகத்திற்கான பலன்கள்:
உலகில் போர் மேகங்கள் சூழ்ந்து காணப்படும். எப்போது எந்த, எந்த நாட்டிற்கு இடையில் யுத்தம் வரும் என்று சொல்ல முடியாது. ஒரு போர் பதற்றத்திலேயே உலக நாடுகளில் அரசியல் சூழ்நிலை இருக்கும். ஆங்காங்கே புரட்சியாளர்கள் உருவாகுவார்கள். மக்கள் புரட்சி செய்து கிளர்ந்து எழுவார்கள். கம்யூனிச சித்தாந்தம் மேலோங்கும். கம்யூனிஸ்ட் கட்சியும் பரவலாக பரபரப்பாக செயல்படும் மற்றும் பேசப்படும். உலக அரங்கில் ரஷ்யா முக்கியஸ்தரான இடம் பெறும். தற்போது அமெரிக்கா முதன்மையானதாக இருக்கக்கூடிய சூழ்நிலையில் வரும் 2025 ஆம் ஆண்டு ரஷ்யாவின் ஆளுமையே உலக அரங்கில் அதிகரிக்கும். இடி மின்னல் தாக்குதலினால் பரவலான உயிர் சேதங்கள் ஏற்படும்.