New Year 2025 (Photo Credit: Team LatestLY)

டிசம்பர் 28, சென்னை (Festival News): புத்தாண்டு 2025 வர இன்னும் ஒரு சில நாட்களே உள்ளன. அதை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் விதமாக, அழகான இடங்களுக்கு சென்று, வரவிருக்கும் ஆண்டைக் கொண்டாடலாம். எனவே, புத்தாண்டு விடுமுறையைத் திட்டமிட, தமிழ்நாட்டில் புத்தாண்டைக் கொண்டாட (New Year 2025 Celebration) சிறந்த இடங்கள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்ப்போம். வழக்கம் போல வீடுகளில் கொண்டாடுவதை விட சற்று வித்தியாசமாக அழகான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற திட்டம் உள்ளதா? இதோ உங்களுக்கான தமிழகத்தில் உள்ள சிறந்த இடங்களின் (Tourist Places) விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம். New Year 2025: "மகிழ்ச்சி பெருக.. மனிதநேயம் சிறக்க.." - புத்தாண்டு பண்டிகை 2025 வாழ்த்துச் செய்தி இதோ..!

சென்னை:

சென்னையில் (Chennai) புத்தாண்டை வரவேற்கும் வகையில், பொதுமக்கள் நள்ளிரவில் வாணவேடிக்கைகள் நிகழ்த்தி, புத்தாண்டின் முதல் நாளில் புத்தாடை உடுத்தியும், ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கியும் தங்களுடைய அன்பை பரிமாறிக் கொள்வது வழக்கம். சென்னையில் மிகப்பெரிய சுற்றுலா தளமான மெரினா கடற்கரையில் (Marina Beach) பல பகுதிகளிலிருந்து வரும் மக்கள் கூடுவதுதான் புத்தாண்டை சென்னையில் கொண்டாடுவதில் சிறப்பான அம்சமாகும். தென்னிந்தியாவின் புத்தாண்டு கொண்டாட சிறந்த ஒன்றாக சென்னை உள்ளது.

Chennai Marina Beach (Photo Credit: YouTube)

கன்னியாகுமரி:

இந்தியாவில் கடைசி பகுதியாக உள்ள கன்னியாகுமரியில் (Kanyakumari) சூரிய உதய காட்சியை பார்ப்பதற்கென்றே பல சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்கள். கன்னியாகுமரியில் தான் மூன்று பெருங்கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் இருந்து சூரியன் உதிக்கின்றது. இங்கு சூரிய அஸ்தமனத்தை விட சூரிய உதயமே (Kanyakumari Sun Rise) மிகவும் அழகாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த பயணத்தின் போது விவேகானந்தபாறை, திருவள்ளுவர் சிலை, கன்னியாகுமரியம்மன் கோவிலுக்கும் செல்லலாம். மேலும், சங்கு மற்றும் சிப்பிகள் மூலம் தயாரிக்கப்படும் ஆடைகள் மற்றும் கைவினைப்பொருட்களை வாங்குவதற்கு இங்கு பல இடங்கள் உள்ளன. தென்னிந்திய மற்றும் தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகளை இங்கு வருகை தரும் சுற்றுலாவாசிகள் தாராளமாக ருசித்து சாப்பிடலாம். உலகின் மிக அழகான சுற்றுலா தலங்களில் ஒன்றாக கன்னியாகுமரி கருதப்படுகிறது. அந்தவகையில், வரவிருக்கும் புத்தாண்டை கொண்டாட சிறப்பான இடமாக இது அமையும்.

Kanyakumari Sun Rise (Photo Credit: YouTube)

கொடைக்கானல்:

"மலைகளின் இளவரசி" என்று அழைக்கப்படும் கொடைக்கானல் (Kodaikanal) தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அதன் மூடுபனி காலநிலை, பசுமையான காடுகள் மற்றும் சலசலக்கும் நீர்வீழ்ச்சிகளுடன் ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். புத்தாண்டை கொண்டாட சிறப்பு வாய்ந்த இடமாக இது இருக்கும். கொடைக்கானலில் ஏரி, பூங்கா, குணா குகை, பைன் மரக்காடுகள் என பல இடங்கள் உள்ளன. கொடைக்கானலில் எப்போதுமே சுற்றுலாப் பயணிகள் வந்தவாறு இருப்பர். இருப்பினும், வரவிருக்கும் புத்தாண்டை சிறப்பிக்க குடும்பத்துடன் கொண்டாடி மகிழ ஓர் அருமையான இடமாக இருக்கும்.

Kodaikanal (Photo Credit: Wikipedia)

ஊட்டி:

'உதகமண்டலம்' எனும் ஊட்டி (Ooty) தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அழகான மலைவாசஸ்தலம் ஆகும். மாசு, சத்தம், போக்குவரத்து ஆகியவற்றில் இருந்து விலகி இந்தப் புத்தாண்டைக் கொண்டாட வேண்டுமானால், அதற்கு ஊட்டிதான் சிறந்த இடம். இங்கு அமைதியான ஏரிகள், பல்வேறு தோட்டங்கள், பூங்காக்கள் மற்றும் அருவிகள் இந்த இடத்திற்கு மேலும் அழகு சேர்க்கிறது. மேலும், இங்கு பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன. இது 2025 புத்தாண்டைக் கொண்டாட சிறந்த இடங்களில் ஒன்றாகும்.

Ooty (Photo Credit: YouTube)

மேகமலை:

தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் அருகேயுள்ள மேகமலை (Megamalai), மேகங்கள் தவழ்ந்து செல்லும் ஓர் அழகிய இடம். மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மேகமலை, வன உயிரின சரணாலயமாக விளங்குகிறது. இங்கு கொடைக்கானல், ஊட்டியை விட குறைவான எண்ணிக்கையிலேயே சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். மேகமலை அமைதியான இயற்கை எழில் மிகுந்த சுற்றுலா தலமாகும். இங்கு ஹைவேவிஸ் மேலணை, கீழணை, தூவாணம் அணை, மணலாறு அணை, வெள்ளியாறு அணை, இரவங்கலாறு அணை என மேகமலையைச் சுற்றி 5 அணைகள் உள்ளன. தேயிலைத் தோட்டங்கள் தான் அதிக பரப்பளவு கொண்டவை. ஹைவேவிஸ் அணையைக் கடந்து சென்றால் `இறைச்சல் பாறை` என்ற அழகான அருவியை காணலாம். அழகான அமைதியாக சுற்றுச்சூழலை ரசிக்க விரும்புவர்கள் இங்கு பொழுதை களிக்கலாம்.

Megamalai (Photo Credit: YouTube)

ஏற்காடு:

ஏற்காடு (Yercaud) என்பது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள கோடை வாழிட நகராகும். ஏற்காடு கடல் மட்டத்திலிருந்து 5326 அடி உயரத்தில் உள்ளது. ஏரிக் காடு என்பதே ஏற்காடு என்று மருவி விட்டது. சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 20 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. 'ஏழைகளின் ஊட்டி' என்றழைக்கப்படும் ஏற்காடு நடுத்தர வர்க்க மக்களுக்கு ஒரு சொர்க்கமாகும். அடர்ந்த மரக்காடுகள் வெயிலின் தாக்கத்தை மறைத்துவிடும் சூழல் கொண்ட ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஏற்காட்டில் இயற்கை எழில் மிகுந்த குன்றும், அங்கு அமைந்துள்ள ஏரியும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது. மேலும், இங்கு சிறுவர்கள் விளையாடி மகிழ பூங்காக்களும் இடம் பெற்றுள்ளன. இங்குள்ள கிளியூர் அருவி மிகவும் பிரபலமானதாகும்.

Yercaud (Photo Credit: Wikipedia)

மேற்கூறிய இடங்களுக்கு சென்று, வரவிருக்கும் புத்தாண்டு தினத்தை குடும்பத்தோடு சிறப்பாக கொண்டாடி மகிழ இனிய புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள்.