Astrology: 2025 ஆம் ஆண்டு அவிட்டம் நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!

2025 ஆம் ஆண்டு அவிட்டம் நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதனைப் பற்றி இப்பதிவில் நாம் காணலாம்.

Astrology (Photo Credit: Pixabay)

டிசம்பர் 24, சென்னை (Astrology Tips): மகரம் மற்றும் கும்ப ராசியில் இருக்கும் அவிட்டம் (Avittam) நட்சத்திரக்காரர்களே, இந்த 2024 ஆம் ஆண்டு உங்களுக்கு மிக சிறப்பான, ஒரு நன்மையான ஆண்டாக, நல்ல பல முன்னேற்றங்களை தந்த ஆண்டாக அமைந்து இருக்கும். இந்த முன்னேற்றமான, சிறப்பான நல்ல பலன்கள் வரும் மாசி மாதம் வரை உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். தொழில் முன்னேற்றம், நல்ல வருமானம், வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைத்திருக்கும். திருமண வயதினருக்கு திருமணம் முடிந்திருக்கும். பணவரவு, ஆடை ஆபரண சேர்க்கை, புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கும். வீடு கட்டுவது, வீடு வாங்குவது, இடம் வாங்குவது போன்ற முன்னேற்றமான செயல்கள் நடைபெற்று இருக்கும்.

அவிட்டம் நட்சத்திரகாரர் பலன்கள்:

2025 ஆம் ஆண்டு உங்களுக்கு ஒரு சுமாரான ஆண்டாகவே அமையும். தொழில் தடை, பணம் நெருக்கடி, கடன் தொல்லை மற்றும் உடல் அசதி, சோர்வு, உடல் நலம் பாதிப்பு போன்ற பலன்கள் பங்குனி மாதம் முதல் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. தனியாரில் வேலை பார்ப்பவர்கள் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கவும். வேலை இழப்பு ஏற்படலாம். சுயதொழில் புரிபவர்களுக்கு லாபம் சுமாராகவே இருக்கும். தற்போது சேர் மார்க்கெட்டில் நல்ல லாபம் கிடைத்துக் கொண்டிருக்கும் இது இன்னும் நான்கு மாதங்களுக்கு இந்த ஒரு நல்ல நிலை தொடரும். அதன் பிறகு ஷேர் மார்க்கெட்டில் ஈடுபடுவதை தற்காலிகமாக ஒரு வருடத்திற்கு நிறுத்தி வைக்கவும். Astrology: 2025 ஆம் ஆண்டு திருவோணம் நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!

மகர ராசிக்காரர்கள் வெளிநாடு செல்ல யோகம் இருக்கிறது, நீண்ட தூரப் பிரயாணங்கள், புண்ணிய ஸ்தல யாத்திரை, தந்தை வழி ஆதரவு, பெரியோர்களின் ஆதரவு ,சாதுக்கள் தரிசனம் போன்ற நற்பலன்கள் நடைபெறும். கும்ப ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டங்கள் கைகூடும். மாசி மாதம் வரை திடீர் அதிர்ஷ்டம், திடீர் பணவரவு, புதிய முயற்சிகளில் வெற்றி, ஆடை ஆபரணச் சேர்க்கை, பூர்வீக சொத்துக்கள் கிடைப்பது, இடங்கள், வீடுகள் பத்திரம் பதிவு செய்வது போன்ற நன்மையான காரியங்கள் நடைபெறும். அரசு அதிகாரிகள் எதிலும் கவனம் மற்றும் விழிப்புணர்வுடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மகர ராசிக்காரர்களுக்கு வாக்கில் சனி இருப்பதால் உங்கள் பேச்சில் கவனம் மற்றும் நிதானம் தேவை. அனாவசியமாக யாரிடமும் வாக்குவாதங்களிலோ, வீண் பேச்சுக்களிலோ ஈடுபட வேண்டாம். அது வில்லங்கத்தில் முடியும். அகால போஜனம் என்று சொல்லக்கூடிய நேரம் தவறி சாப்பிடுவது, திடீர் பண நெருக்கடி, மன உளைச்சல் , குடும்பத்தில் குழப்பம், சண்டை சச்சரவுகள், கோபதாபங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

கும்ப ராசிக்காரர்கள் சோர்வு, அசதி, எந்த காரியத்திலும் தடை, புதிய முயற்சிகளில் இழுபறி, தொழிலில் எதிர்பார்த்த லாபமின்மை போன்ற பலன்கள் பங்குனி மாதம் முதல் நடைபெற வாய்ப்பு உள்ளது. வீண் அலைச்சல்களை தவிர்க்கவும். மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். நீங்கள் எதிர்பார்த்த மேல்படிப்பு படிக்க தடை ஏற்படலாம். அல்லது வேலைவாய்ப்பு கிடைக்காமல் தள்ளிப் போகலாம். கிடைத்த வேலையை பார்த்து வாருங்கள். இன்னும் ஓராண்டு கழித்து நீங்கள் விரும்பியபடி நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு மார்ச் வரை நல்ல ஒரு அதிர்ஷ்டமான நேரமாக இருக்கிறது. அதற்குப்பின் நீங்கள் எதிலும் கவனமாக இருக்க வேண்டும், பதவி இழப்பு, கெட்ட பெயர் வாங்குவது ,வீண் பிரச்சனைகளில் சிக்கிக் கொள்வது போன்ற கெடுபலன்கள் நடைபெறும்.

திருமண வயதில் உள்ளவர்கள், திருமணம் செய்வது என்றால் மாசி மாதத்திற்குள் திருமணம் செய்ய வேண்டும். இல்லையென்றால் அதற்குப் பிறகு ஓராண்டு காலம் திருமணம் செய்யக்கூடாது. மீறி செய்தால் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படும். நிம்மதி போகும். புதுமண தம்பதியர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து செல்ல நேரிடும். தற்போது புரோக்கரேஜ், கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு. மார்ச் மாதம் முதல் தொழில் மந்தம் இழுபறியான வருமானம், வீண் பிரச்சனைகள் போன்றவை ஏற்படும். பெண்கள் மார்ச் மாதத்திற்கு பிறகு உடல் நலனில் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் பிரச்சனை இல்லாமல் கொண்டு செல்வது உங்கள் கையில் இருக்கிறது. தற்போது கடன் கொடுக்கல், வாங்கல் தொழில் மிகச் சிறப்பாக நடைபெறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மார்ச் மாதத்திற்கு பிறகு கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். வீண் பிரச்சனைகள், சண்டை சச்சரவுகள் ,வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

பரிகாரம்:

நவகிரக சனி வழிபாடு நன்மை தரும். பழனி முருகனை தரிசித்து வாருங்கள் உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி வெற்றிகரமான வாழ்வு அமையும்.

மார்ச் மாதம் வரை உங்கள் மதிப்பெண் 80. மார்ச்சுக்கு பிறகு 40.

இது கோச்சார ரீதியான பலன் மட்டுமே.