டிசம்பர் 23, சென்னை (Astrology Tips): மகர ராசியில் இருக்கும் திருவோணம் (Thiruvonam) நட்சத்திரக்காரர்களே, எந்த வேலையை அல்லது பொறுப்பை கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்து பாராட்டு பெறும் திருவோணம் நட்சத்திரகாரர்களே, கடந்த ஒரு வருடமாக பல சிரமங்களை அனுபவித்து வருகிறீர்கள். உங்களுக்கு வாக்கு ஸ்தானம் என்று சொல்லக்கூடிய இரண்டாம் இடத்திலே சனீஸ்வரர் இருப்பதால் உங்கள் பேச்சினால், வாக்கினால் பல பிரச்சனைகளை சந்தித்து இருப்பீர்கள். பண நெருக்க , கடன் தொல்லை தொழிலில் எதிர்பார்த்த அளவு லாபமின்மை, குடும்பத்தில் பிரச்சனை, நண்பர்களிடையே கருத்து வேறுபாடு போன்ற சிரமங்களை அனுபவித்து வந்து கொண்டு இருக்கிறீர்கள். இந்த நிலை வரும் மார்ச் மாதம் முழுவதும் இருக்கும். அதன் பிறகு நீங்கள் தொட்டது எல்லாம் பொன்னாகும்.
திருவோணம் நட்சத்திரகாரர் பலன்கள்:
திடீர் பணவரவு தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம், வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். சுயதொழில் புரிபவர்கள் தொழிலில் நல்ல லாபத்தை காண்பார்கள். இதுவரை தடையாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்கும். கடந்த எட்டு மாத காலமாக உடல் அசதி சோர்வு, எந்த முயற்சி செய்தாலும் தடைகள், இறைவழிபாடு கூட செய்ய முடியாத நிலை, கடன் தொல்லை, மறைவு வாழ்க்கை போன்றவற்றை கூட அனுபவித்து இருப்பீர்கள். இது தற்போது உங்களுக்கு ஓரளவு பாதிப்பு குறைந்து இருக்கும் பங்குனி மாதம் முதல் மிகச் சிறப்பான ஒரு கோச்சார பலன் உங்களுக்கு வர இருக்கின்றது. அரசு அதிகாரிகளுக்கு அவர்கள் விரும்பிய இடத்திற்கு மாறுதல் கிடைக்கும். மேல் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. Astrology: 2025 ஆம் ஆண்டு உத்திராடம் நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!
திருமண வயதில் உள்ளவர்கள் இந்த ஆண்டு திருமணம் நடக்கலாம். அது உங்கள் ஜாதகத்தை பொறுத்ததும் கூட. ஷேர் மார்க்கெட்டில் உள்ளவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகள் கைகூடும். வாகன யோகங்கள் உண்டு. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். இதுவரை பிரச்சினையாக இருந்த குடும்பம், மகிழ்ச்சியான சூழ்நிலைக்கு மாறும். கணவன் அல்லது மனைவி இவர்களின் இளைய சகோதரர்களால் உங்களுக்கு ஆதாயம் உண்டு. கணவன் அல்லது மனைவி வகையில் பூர்வீக சொத்துக்கள் இருப்பின், அவை உங்கள் ஜாதக அடிப்படையில் நன்றாக திசை புத்திகள் இருந்தால் இந்த 2025 மார்ச்சுக்கு மேல் ஆண்டு இறுதிக்குள் கிடைப்பதற்கு யோகம் உண்டு. இடம் வாங்குவதற்கு யோகம் உண்டு. வீடு கட்ட யோகம் உண்டு. திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டு.
மாணவர்கள் இந்த ஆண்டு கடுமையாக முயற்சி செய்து படிக்க வேண்டும். அடுத்த ஆண்டு உங்களுக்கு ஒரு வெற்றிகரமான ஆண்டு. நீங்கள் நினைத்த மேல் படிப்பு படிப்பதற்கு யோகம் இருக்கிறது அல்லது வேலைக்கு செல்வதென்றாலும் நீங்கள் வேலைக்கு செல்லலாம். கண்டிப்பாக வேலை கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய ஆண்டு, ஒரு வெற்றிகரமான ஆண்டாக அமையும். மிகப்பெரிய பிரம்மாண்டமான வெற்றிகளை கொடுக்கக்கூடிய ஆண்டாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகும். உங்களின் புகழ் பெருமை பரவும். பெண்கள் நகைகள் அடகில் இருந்தால் அவற்றை திருப்புவீர்கள். புதிய கடன் வேண்டுமென்றாலும் உங்களுக்கு கிடைக்கும். புதிய நகை, ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். கடன் கொடுக்கல் வாங்கலில் தொழில் செய்பவர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பான ஒரு ஆண்டாக அமையும். நல்ல லாபம் கிடைக்கும். அதிக அளவு பணப்புழக்கம் நடைபெறும்.
அடிக்கடி விருந்து சாப்பாடு, சென்ற இடமெல்லாம் சிறப்பு போன்ற நற்பலன்கள் நடைபெறும். அரசியல்வாதிகள் புதிய பதவிகளை பெறுவார்கள். இதுவரை அவர்களுக்கு இருந்து வந்த கெட்ட பெயர் நீங்கும். பெரிய தலைவர்களிடமும் பொதுமக்களிடமும் நல்ல பெயர் சம்பாதிப்பார்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்கும் .நீண்ட நாள் வேண்டுதல்களை, பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கு, இந்த ஆண்டு மிகச்சிறந்த ஆண்டு. ஏதாவது வேண்டுதல்கள் இருந்தால் இந்த வருடத்தில் அவற்றை நிறைவேற்றி விடுங்கள். அதற்குரிய சூழ்நிலைகள் நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் இந்த 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு ஒரு மிகச் சிறப்பான ஆண்டு.
பரிகாரம்:
சிவ வழிபாடு சிறப்பை தரும். நவகிரக சனி வழிபாடு நன்மை தரும்.
மார்ச் மாதம் வரை உங்கள் மதிப்பெண் 40. மார்ச்சுக்கு பிறகு 80.
இது கோச்சார ரீதியான பலன் மட்டுமே.