Astrology: 2025 ஆம் ஆண்டு விசாகம் நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!
2025 ஆம் ஆண்டு விசாகம் நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதனைப் பற்றி இப்பதிவில் நாம் காணலாம்.
டிசம்பர் 16, சென்னை (Astrology Tips): துலாம் ராசி மற்றும் விருச்சிக ராசியில் இருக்கும் விசாகம் (Vishakham) நட்சத்திரக்காரர்களே, உங்களுக்கு கடந்த இரண்டு ஆண்டு காலமாகவே சனீஸ்வரர் எந்த கெடுதலும் செய்யாமல், உங்களை நல்வழிப்படுத்தி மற்றும் உங்களுக்கு சனீஸ்வரர் தன்னாலான இயன்ற நன்மைகளை செய்து வந்து கொண்டு இருக்கிறார். அவரால் இந்த இரண்டு ஆண்டு காலமாக உங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த நிலை வரும் மார்ச் மாதம் வரை தொடரும். பங்குனி மாதம் முதல் நீங்கள் எதிலும் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். புத்திரர்களால் பிரச்சனை, குழந்தைகளின் ஆரோக்கிய குறைவு அல்லது படிப்பிற்காக ஆகும் செலவு அல்லது எதிர்பாராத விபத்துக்கள் போன்ற கெடு பலன்கள் நடைபெறும்.
கடன் நெருக்கடி அதிகரிக்கும். குடும்பத்தில் குழப்பங்கள் உருவாகும். உடல் நலனில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் மந்தமாக இருக்கும். எந்த ஒரு காரியமும் பல இழுபறிகளுக்குப் பிறகு நடைபெறும். வீண் செலவினங்கள் ஏற்படும். அதை நீங்கள் புண்ணிய காரிய செலவாக மாற்றிக் கொள்வது நலம். நீண்ட தூரப் பிரயாணங்கள், புண்ணிய ஸ்தல யாத்திரை, சாதுக்கள் தரிசனம் போன்ற நற்பலன்களும் நடக்கும். தற்போது உங்களுக்கு புதிய கடன் கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கின்றது. கடன் தொல்லை அவ்வளவாக இருக்காது. தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். மாணவர்கள் நன்றாக படிப்பார்கள். மார்ச் மாதத்திற்கு மேல் புதிய கல்வியாண்டில் மிகச் சிரத்தையோடு, கடுமையாக படிக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த ஆண்டு உங்களுக்கு மிக சிறப்பானதாக அமையும். Astrology: 2025 ஆம் ஆண்டு சுவாதி நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!
வரக்கூடிய மார்ச் மாதத்திற்கு மேலான ஓராண்டு உங்களுக்கு ஒரு சோதனையான காலகட்டமாகவே இருக்கும். தனியாரில் வேலை பார்ப்பவர்களுக்கு வேலை இழப்பு, அரசு அதிகாரிகளுக்கு மேலதிகாரிகளால் பிரச்சனை, அரசியல்வாதிகளுக்கு பெயர் கெடுதல், பதவி இழப்பு, சுயதொழில் செய்பவர்களுக்கு தொழில் நஷ்டங்கள், தொழில் முடக்கம், வியாபாரம் சரியில்லாமல் புதிய கடன் வாங்கும் சூழ்நிலை, அந்த கடனால் பிரச்சனை பண நெருக்கடி போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். தற்போதைய சூழ்நிலை உங்களுக்கு மார்ச் மாதம் வரை மிக சிறப்பாகவே இருக்கிறது என்று கூறலாம். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொழில் ஆரம்பிக்க விரும்புபவர்கள், புதிய முயற்சியில் ஈடுபடுபவர்கள், இந்த மார்ச் மாதத்திற்கு முன்னதாகவே நீங்கள் அந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு என்றால் கண்டிப்பாக தடை ஏற்படும். மார்ச்சுக்கு மேல் நகையை அடகு வைப்பது, புதிய கடன் வாங்குவது, வாகன வகைகளில் செலவினங்கள் ஏற்படுவது, ஏற்கனவே வாங்கி இருந்த கடனால் தொல்லை போன்ற பலன்கள் நடைபெறும்.
பரிகாரம்: இறை வழிபாட்டில் தீவிரமாக ஈடுபட வேண்டும். கோளறு பதிகம் படிப்பது மிகவும் நன்மையை தரும். ஆஞ்சநேயர் வழிபாடு மற்றும் சனீஸ்வர வழிபாடு நன்மை தரும். ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலம் நல்ல ஆரோக்கியம்,உடல் வலிமை, உறுதி,மனத்தெளிவு, மன உறுதி, தெளிவான சிந்தனை, புத்தி கூர்மை, பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மன ஆற்றல் சக்தி கிடைக்கும். சனீஸ்வரரை வழிபடுவதன் மூலம் அவர் நமக்கு தர இருக்கும் கெடு பலன்களை குறைத்து விடுவார். ஆக நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் கோயிலுக்கு செல்ல வேண்டும். கோயிலுக்கு செல்ல முடியவில்லை என்றால் வீட்டிலேயே இறை வழிபாடு செய்யலாம். வீட்டிலும் இறைவழிபாடு செய்ய முடியவில்லை என்றால் மனதிலேயே கோயில் எழுப்பிய பூசலார் நாயனாரை போல சதா சர்வ காலமும் இறைவனுடைய நாமத்தையே மனதில் சொல்லிக் கொண்டு இருக்கலாம். இது ஒரு மிகச்சிறந்த பரிகாரம்.
மார்ச் வரை உங்கள் மதிப்பெண் 80, மார்ச்சுக்கு மேல் உங்கள் மதிப்பெண் 50.
இது கோச்சார ரீதியான பலன் மட்டுமே.