டிசம்பர் 13, சென்னை (Astrology Tips): துலாம் ராசியில் இருக்கும் சுவாதி (Swati) நட்சத்திரக்காரர்களே, கலைத்துறையில் ஆர்வமும், கலை ரசனையும் கொண்டவர்களே, ஆடல் பாடல் சங்கீதம் சினிமாக்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களே, உங்களுடைய நிலைமை தற்போது கீரியிடம் அகப்பட்டு கொண்ட கருநாகத்தை போல கடுமையான போராட்டத்திலே, ஜீவாதார போராட்டத்திலே, ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரச்சனைகளிலே சிக்கி தவித்துக் கொண்டு இருக்கிறீர்கள். யாராவது நம்முடைய பிரச்சனைகளில் இருந்து காப்பாற்ற மாட்டார்களா அல்லது இந்த கடுமையான நேரம் எப்போது முடிவுக்கு வரும். நம்முடைய பிரச்சனைகள் எல்லாம் எப்போது நீங்கும் என்று தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது நன்றாக தெரிகிறது.
ஜென்ம சனிக்கு இணையான ஒரு கடுமையான சூழ்நிலையை அனுபவித்துக் கொண்டு இருக்கிறீர்கள். உடல்நல பிரச்சனை, ஆரோக்கிய குறைவு ,தொழில் நஷ்டம், தொழில் முடக்கம், வேலை இழப்பு, கோர்ட், கேசு போலீஸ், பஞ்சாயத்து போன்ற பிரச்சனைகளால் மனதளவிலும் உடலளவிலும் மிகவும் சோர்ந்து காணப்படுவீர்கள். எந்த ஒரு நல்ல காரியமும் செய்ய முடியாமல் இழுபறியாக இருப்பது, தடைகளை ஏற்படுத்துவது, ஒரு சாதாரண வேலையை கூட பல இழுபறிகளுக்கு பின், நீண்ட அலைச்சல்களுக்கு பின் முடிவுக்கு வருவது போன்றவை உங்களுக்கு மன உளைச்சலை தந்து கொண்டிருக்கும். குடும்பத்தில் மனைவியிடம் சண்டை சச்சரவு, பெண்களால் பிரச்சனைகள், வண்டி ,வாகனங்களினால் பிரச்சனைகள், விபத்து, வீண் விரயச் செலவுகள் போன்ற கெடு பலன்களை கடந்த 10 மாத காலமாக அனுபவித்துக் கொண்டு வருகிறீர்கள். இந்த நிலை வரும் மாசி மாதம் முழுவதும் அதாவது மார்ச் 15ஆம் தேதி வரை இந்த நிலை தொடரும். அதற்குப்பின் ஒரு ஒளி கீற்று தெரியும். இருள் நீங்கி ஒளி பிறக்கும். Astrology: 2025 ஆம் ஆண்டு சித்திரை நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!
தற்போது பன்னிரண்டாம் இடத்தில் கேது உங்களுக்கு சாதகமாக இருப்பதால் வெளிநாடு செல்வது நீண்ட தூர பிரயாணங்கள், அயலிடத்தில் வேலை வாய்ப்பு போன்ற சுப பலன்கள் நடைபெறும். இருந்தாலும் அவை தீவிர முயற்சிக்குப் பின்னும் பல தடைகளை தாண்டியும் வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு கடந்த 10 மாத காலமாக எந்த வாய்ப்பும் இல்லாமல் இருக்க சூழ்நிலை உள்ளது. வரும் மார்ச் மேல் புதிய வாய்ப்புகள், அதில் நல்ல பணவரவு, தொழில் முன்னேற்றம், புதிய வாகனம் வாங்குதல் போன்ற நல்ல பலன்கள் நடைபெறும். குழந்தைகளால் பிரச்சனை, புத்திரர்களால் சோகம், குழந்தைகள் உடல் நல பிரச்சனை ,கல்வி பிரச்சனை பணம் நெருக்கடி ,கடன் தொல்லை, தொழில் மந்தம் போன்ற கெடு பலன்கள் தற்போது நடைபெற்றாலும் ஒரு சில கிரகங்களின் ஆதரவோடு அவற்றை முறியடித்து ஓரளவு லாபத்தை கொடுக்க கூடிய அமைப்பில் இருக்கிறது.
உங்கள் திசை புத்திகள் நன்றாக இருந்தால் ஓரளவு நன்றாக இருக்கும் திசை புத்திகள் சரியில்லை என்றால் இது ஒரு மிகவும் மோசமான காலகட்டம். மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். அனைத்து கேள்வி பதில்களையும் படிக்க வேண்டும். மிக கடுமையாக படித்தாலும் நல்ல மதிப்பெண் எடுப்பது கடினமே. அரசியல்வாதிகள் பதவி பறிபோயிருக்கும். அல்லது கெட்ட பெயர் சம்பாதித்து இருப்பீர்கள். அரசு அதிகாரிகளுக்கு இது சோதனையான காலம். உங்கள் கடமையை செவ்வனே செய்யுங்கள். இல்லையென்றால் பொதுமக்களிடமும் மேலதிகாரியிடம் கெட்ட பெயர் வாங்க வேண்டி இருக்கும். வரும் மார்ச் மாதத்திற்கு மேல் உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து, தடைகள் அகன்று, புதிய வேலைவாய்ப்பு, பணவரவு, கடன் தொல்லை நீங்குதல், புதிய தொழில் தொடங்குதல் மற்றும் நிலுவை பணங்கள் வருவது போன்ற சுப பலன்கள் நடைபெறும். தற்போது எந்த புதிய முயற்சியிலும் இறங்க கூடாது. சேர் மார்க்கெட்டில் பலத்த அடி விழும் மார்ச் வரை எதிலும் ஒதுங்கி இருப்பது நல்லது .
பரிகாரம்: மகாலட்சுமி வழிபாடு நன்மை உண்டாகும். துர்க்கை வழிபாடு துன்பத்தை போக்கும்.
மார்ச் வரை உங்கள் மதிப்பெண் 40, மார்ச்சுக்கு மேல் உங்கள் மதிப்பெண் 80.
இது கோச்சார ரீதியான பலன் மட்டுமே.