Astrology: 2025 ஆம் ஆண்டு திருவாதிரை நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!

2025 ஆம் ஆண்டு திருவாதிரை நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதனைப் பற்றி இப்பதிவில் நாம் காணலாம்.

ASTRO (Photo Credit: Pixabay)

நவம்பர் 28, சென்னை (Astrology Tips): "சோதனை மேல் சோதனை போதுமடா சாமி, வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி" என்று பாடிக் கொண்டிருக்கும் திருவாதிரை (Thiruvadhirai) நட்சத்திரக்காரர்களே , பயப்படாதீர்கள்! உங்களுக்கு விடிவு காலம் நெருங்கி விட்டது. கடந்த ஓராண்டாக வெளியில் சொல்ல முடியாத துன்பத்தில், பிரச்சனைகளில், சிக்கல்களில் தவித்துக் கொண்டிருக்கும் திருவாதிரை நட்சத்திரக்காரர்களே, நமக்கு எப்போது விடிவு காலம் பிறக்கும் என்று ஏங்கிக் கொண்டிருப்பது தெரிகிறது.

தொழில் தடை, தொழிலில் போட்டி, பிரச்சனை, வேலை இழப்பு, நோய் நொடிகள், குடும்பத்தில் பிரச்சனை, மன நிம்மதி இல்லாமை, கடன் தொல்லை, தந்தையினால் பிரச்சனை, தந்தை வழி செலவினங்கள், மாணவர்களுக்கு படிக்கும் இடத்தில் பிரச்சனை, போக்குவரத்தில் பிரச்சனை, கணவன் மனைவி பிரிவு, மன ஒற்றுமையின்மை சண்டை சச்சரவுகள், வெளியூர் வெளிநாடுகளில் தங்கி இருப்பவர்களுக்கு மன நிம்மதி இல்லாமை, எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற பயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் திருவாதிரை நட்சத்திரக்காரர்களே, உங்கள் கவலையை விடுங்கள் வரும் பங்குனி மாதம் வரை இந்த நிலைமை தொடர்ந்தாலும் ஒரு சில கிரகங்களின் ஆதரவோடு இந்த 2025 உங்களுக்கு ஒரு விடிவு காலத்தை தரும். Astrology: 2025 ஆம் ஆண்டு மிருகசீரிடம் நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!

திருமண வயதில் இருப்பவர்களுக்கு இந்த 2025 ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற வாய்ப்பு உள்ளது. அது உங்கள் ஜாதகத்தையும் பொறுத்தது. பங்குனி மாதம் முதல், வேலை இல்லாதவர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும். கடன் தொல்லைகள் நீங்கும். புதிய பணவரவு கிடைக்கும். பிரிந்து இருக்கும் கணவன் மனைவியர் ஒன்று சேருவார்கள். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் குழப்பங்கள் தீரும். குழந்தை பாக்கியங்கள் கிடைக்கும். வெளிநாட்டு பிரயாணங்கள், நீண்ட தூர பிரயாணங்கள் சித்திரை மாதத்திற்கு மேல் நல்ல பலன் கொடுக்கும். புதிதாக கடன் வாங்குவதற்கு வாய்ப்பு அமையும். தற்போது ஏற்கனவே உள்ள கடன் பிரச்சனைகள் நெருக்கடி கொடுக்கும். கடுமையான பண நெருக்கடி, கடுமையான பிரச்சனைகளால் மன உளைச்சல், எங்காவது ஊரை விட்டு ஓடிப் போய் விடலாமா என்ற சிந்தனைகள், எதிரிகளால் தொல்லைகள், நோயுடன் போராடுவது போன்ற பிரச்சனைகளில் இருந்து நிச்சயமாக சித்திரை மாதத்திற்கு மேல் விடுபடுவீர்கள்.

பரிகாரம்: துர்க்கை வழிபாடு துன்பத்தைப் போக்கும். நடராஜர் வழிபாடு நன்மையை தரும்.

உங்கள் மதிப்பெண் 70.

இது கோச்சார ரீதியான பலன் மட்டுமே.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement