Astrology: 2025 ஆம் ஆண்டு கேட்டை நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!

2025 ஆம் ஆண்டு கேட்டை நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதனைப் பற்றி இப்பதிவில் நாம் காணலாம்.

ASTRO (Photo Credit: Pixabay)

டிசம்பர் 17, சென்னை (Astrology Tips): விருச்சிக ராசியில் இருக்கும் கேட்டை (Kettai) நட்சத்திரக்காரர்களே, கடந்த 10 மாத காலமாக, வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம் என்று நீங்கள் வாழ்க்கையின் விரக்தியின் உச்சத்திற்கே சென்று இருப்பது நன்றாக தெரிகிறது. உரலுக்கு ஒரு பக்கம் இடி என்றால் மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பார்கள். அதைப்போல நீங்கள் திரும்பிய பக்கம் எல்லாம் இடி, அடி, தடை- அதற்கு விடை காண முடியாமல் நீங்கள் தத்தளிப்பது புரிகிறது. தொழில் நஷ்டம், சுயதொழில் புரிபவர்களுக்கு தொழிலில் போட்டி, சரியான வியாபாரம் இன்றி வருமானமின்மை, தனியாரில் வேலை பார்ப்பவர்கள் வேலை இழப்பு, அதனால் வருமானம் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும். குடும்பத்தில் பிரச்சனை, ஒரு தெளிவான முடிவெடுக்க முடியாமல் திணறுவது, கடன் நெருக்கடி, புதிய தேவைகளுக்கு பண நெருக்கடி, வாகன வகையில் வீண் செலவினங்கள் ஏற்படும். ஒரு செயலை முடிப்பதற்கு வீணான அலைச்சல், ஒரு சிலருக்கு உடல் நலம் பாதிப்பு, மருத்துவ செலவினங்கள் ஏற்படும்.

கேட்டை நட்சத்திரகாரர் பலன்கள்:

எதிரிகளால் தொல்லை, நோய் நொடிகளால் அவதி, ஷேர் மார்க்கெட்டில் பலத்த நஷ்டம், என நீங்கள் தலையில் கையை வைத்துக் கொண்டு புலம்புவது நன்றாக கேட்கிறது. கேட்டை நட்சத்திரக்காரர்களே, வீணாக கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு ஒரு விடியல் பிறப்பதற்கு இன்னும் ஒரு மூன்று மாதம் இருக்கின்றது. ஆம் பங்குனி மாதம் பிறந்த உடன் உங்கள் இருண்ட வாழ்வில் சூரியனின் ஒளி கீற்றுகள் தெரியும். இருள் மெல்ல, மெல்ல மறைந்து, புதிய வெளிச்சம் பிறக்கும். வாழ்வில் புதிய நம்பிக்கை பிறக்கும். இந்த ஒரு இக்கட்டான நிலை எப்போது முடியும் என்று நீங்கள் ஏங்கி தவித்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்த நேரம் பங்குனி மாதம் முதல் உங்கள் பிரச்சனைகள் படிப்படியாக தீர்வுக்கு வரும்.

தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும்.தற்போது எதிரியான நண்பர்கள் கூட உதவி செய்வார்கள். தற்போது நண்பர்களாலும் உங்களுக்கு பிரச்சனை. தாய் வழியில் பிரச்சனை, அம்மாவுடன் சண்டை சச்சரவு, உறவினருடன் கருத்து வேறுபாடு, மோதல்கள் ,இப்படி இருக்கக்கூடிய சூழ்நிலை பங்குனி மாதம் முதல் உங்களுக்கு ஒரு சிறப்பான முன்னேற்றம் படிப்படியாக ஏற்படும். மாசி மாதம் வரை எந்த புதிய முயற்சிகளிலும் ஈடுபடக்கூடாது.வீடு கட்ட கூடாது, வீடு வாங்குதல், நிலம் வாங்குவது, விற்பது போன்ற எந்த முயற்சியும் செய்ய வேண்டாம். அரசு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கலாம் அல்லது மெமோ வாங்குவது, மேலதிகாரிகளிடம் கெட்ட பெயர் வாங்குவது, பொதுமக்களிடம் வீண் பிரச்சனை போன்ற சம்பவங்கள் நடந்தேறி இருக்கலாம். இன்னும் கவனம் தேவை. Astrology: 2025 ஆம் ஆண்டு அனுஷம் நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!

அரசியல்வாதிகளின் பதவி ஆட்டம் கண்டு கொண்டிருக்கலாம். பெரிய அரசியல்வாதிகளிடமும் பொதுமக்களிடமும் நீங்கள் எச்சரிக்கையோடும், கவனத்தோடும் இருக்க வேண்டும். இல்லையென்றால் வீணான கெட்ட பெயர்கள், பதவி இழப்பு போன்றவை அரசியல்வாதிகளுக்கு ஏற்படும். கலைத்துறையினருக்கு வீண் பிரச்சனைகளும், அலைச்சல்களும் ஏற்படும்.சம்பள விஷயத்தில் சொன்னபடி சொன்னவர்கள் நடந்து கொள்ள மாட்டார்கள். சரியான ஊதியம் கிடைக்காது. புதிய வாய்ப்புகள் கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கும். அப்படியே கிடைத்தாலும் உங்களுக்கு கெட்ட பெயரே மிஞ்சும். உங்களுக்கு எதிரான சதி வலைகள் பின்னப்படும். நல்ல பணவரவு, தொழில் முன்னேற்றம், புதிய தொழில் ஆரம்பிப்பது, புதிய வேலை கிடைப்பது, சம்பள உயர்வு, பதவி உயர்வு,வெளிநாட்டு வேலைவாய்ப்பு போன்றவை 2025 பங்குனி மாதம் முதல் நீங்கள் எதிர்பார்க்கலாம்.

பெண்களுக்கு உடல் நலம் பாதிப்பு, சண்டை சச்சரவு ,அண்டை வீட்டாருடன் பிரச்சனைகள், நகையை அடகு வைப்பது, குடும்பத்தில் பிரச்சனை போன்ற கெடுபலன்கள் நடந்து கொண்டிருக்கும். பங்குனி மாதம் முதல், புதிய ஆடை ஆபரணச் சேர்க்கை, நகையை மீட்பது போன்ற சுப காரியங்கள் நடைபெறும். திருமண வயதில் உள்ளவர்கள் மாசி வரை திருமணம் கண்டிப்பாக செய்யக்கூடாது. இந்த கேட்டை நட்சத்திரக்காரர்கள் இந்த பத்து மாதங்களுக்குள் திருமணம் செய்து இருந்தால், நிச்சயம் அவர்கள் வீட்டில் பெரிய குழப்பங்கள், பிரச்சனைகள், சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு பிரிந்து இருக்க நேரிடும். அப்படி இல்லை என்றால் உடல் நலன் பாதிக்கப்பட்டு இருக்கும். அப்படி இல்லை என்றால் தொழில் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும். வீண் கவலை வேண்டாம்.

பரிகாரம்:

ஆஞ்சநேயர் வழிபாடு மன தைரியத்தையும், புத்தி தெளிவையும், பிரச்சனைகளை எதிர்நோக்கும் சக்தியையும் வழங்கும். ஆஞ்சநேயருக்கு புதன் அல்லது சனிக்கிழமையில் வெற்றிலை மாலை சாத்தி, வெண்ணெய் சாற்றி வாருங்கள். முருகப்பெருமான் வழிபாடு முன்னேற்றத்தை தரும்.

உங்கள் மதிப்பெண் மார்ச் வரை 30 மார்ச்சுக்கு பிறகு 80.

இது கோச்சார ரீதியான பலன் மட்டுமே.