Christmas 2024: கிறிஸ்துமஸ் தினம் ஸ்பெஷல்.. சாண்டா கிளாஸ் பற்றிய உண்மை என்ன தெரியுமா?!
கிறிஸ்துமஸ் என்றாலே எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் கதாபாத்திரம் கிறிஸ்துமஸ் தாத்தா எனப்படும் சாண்டா கிளாஸ்.
டிசம்பர் 25, சென்னை (Festival News): உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினம் (Christmas) கோலாகலமாக கொண்டப்படுகிறது. துயரத்தில் இருந்து மனிதகுலத்தை காப்பதற்காகவே மண்ணில் இயேசு கிறிஸ்து அவதரித்தார். இயேசு கிறிஸ்து அவதரித்த போது விண்மீன் வழிகாட்டியது. பாலன் இயேசு இவ்வுலகிற்கு வந்ததை அறிவித்தது உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளையும் கிறிஸ்தவர்கள் கொண்டாடுவது வழக்கம். கேக் வெட்டியும், நண்பர்கள், குடும்பத்தினர், உறவினர்களுடன் வாழ்த்துக்களை பரிமாறி இன்பமாக இந்நாளை கொண்டாடுகிறார்கள்.
கிறிஸ்துமஸ் வரலாறு:
இயேசு கிறிஸ்து (Jesus Christ) எப்போது இந்த பூமியில் அவதரித்தார் என்பது பற்றிய எந்தவித குறிப்புகளும் பைபிளில் இல்லை. இருப்பினும், ஆண்டுதோறும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்து அவதரித்த நாளாக, கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகிறோம். அன்னை மேரியின் கனவில், கேப்ரியல் தூதர் தோன்றி அவள் கருவுற்றிருப்பதையும், அவள் ஒரு மகனை ஈன்றெடுக்க போகிறாள் என்றும், அந்த குழந்தை இறைவனின் குழந்தை, தேவ தூதன் என்றும் தெரிவித்தது. கனவில் வந்த தேவதை கூறியபடி, கன்னி மரியாள் கருவுற்றாள். பிரசவ காலத்தின்போது பெத்லகேமில் இரவு நேரத்தில் எங்கு தங்குவது என தெரியாமல் திகைத்து போய் இருந்த மேரி, ஆடு மேய்ப்பவர் ஒருவரிடம் உதவி கேட்டாள். அவரும் அன்று இரவு மாட்டுத் தொழுவத்தில் தங்குவதற்கு மேரிக்கு இடம் கொடுத்தார். அடுத்த நாள் இயேசு கிறிஸ்துவை, மேரி ஈன்றெடுத்தாள். வளர்ப்பு தந்தையாக புனித சூசையப்பர் இருந்தார். இயேசு பிறப்பதற்கு முன் உலகில் பல தீமைகளும் பரவி இருந்தது. தீமைகள் அனைத்தையும் அழித்து, உலகை அமைதியானதாக மாற்றவே மனித வடிவில் குழந்தை இயேசு பிறந்தார்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்:
பாலன் இயேசு பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கிறிஸ்தவர்கள் தங்களின் வீடுகளில் நட்சத்திரங்களை ஒளிரவிட்டும், வீடுகளில் குடில்கள் மற்றும் கிறிஸ்துமஸ் மரங்கள் அமைத்தும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடங்கிவிடும். வீடுகளில் கிறிஸ்துமஸ் மரம், ஸ்டார் என அதனைத் தொடர்ந்து, கிறிஸ்துமஸ் தாத்தா வீடுகளுக்கு வந்து பரிசு தருவது என வெகுவிமர்சையாக கொண்டாடி மகிழ்வர். Astrology: 2025 ஆம் ஆண்டு சதயம் நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!
பாவங்களை போக்க வந்த தேவ மைந்தன்:
உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ பெருமக்கள் புத்தாடை உடுத்தியும், கேக்குகளையும், வாழ்த்துக்களையும் பகிர்ந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம். உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இரவு நேர சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெறும். அன்றிரவு இயேசு கிறிஸ்துவின் தியாகத்தையும், மற்றவர்களின் தவறுகளை மன்னித்து அனைவரிடமும் அன்பு செலுத்த வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது. இந்நாளில் அதிகமாக அன்பை பகிர்வோம். இயேசு கிறிஸ்துவின் போதனைகளை வாழ்வில் கடைபிடித்து அன்பின் வழி நடப்போம் என்பதே கிறிஸ்துவ மதத்தின் நம்பிக்கையாகும்.
சாண்டா கிளாஸ்:
மேலும், கிறிஸ்துமஸ் என்றாலே இங்குப் பலருக்கும் நினைவுக்கு வருவது சாண்டா கிளாஸ் தான். நள்ளிரவில் வீடுகளுக்கு வரும் சாண்டா தாத்தா, வீட்டிலுள்ள குழந்தைகளுக்குப் பரிசுகளை வழங்கி செல்வார் என்பதே நம்பிக்கை. சாண்டா தாத்தா இப்போது கற்பனை கதாபாத்திரம் என்றாலும் இது முன்பு ஒரு காலத்தில் இருந்த நபரை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டதாகவும். பின்லாந்து சுற்றுலாத் துறை லாப்லாந்தில் உள்ள கோர்வடுந்துரி என்ற பகுதியில் தான் சாண்டா கிப்ட்களை ரெடி செய்யும் ஃபேக்டரி இருப்பதாகச் சொல்கிறது. டென்மார்க்கும் கிரீன்லாந்து பகுதியில் தான் சாண்டா வசிப்பதாகக் கூறுகிறது. ஸ்வீடன் தங்கள் நாட்டில் உள்ள மோரா என்ற பகுதியில் தான் வசிப்பதாகக் குறிப்பிடுகிறது. கனடா கடந்த 2013ல் சாண்டா தங்கள் நாட்டுக் குடிமகன் என்று சொல்லும் வகையில் சாண்டாவுக்கும் அவரது மனைவிக்கும் பாஸ்போர்ட் கூட கொடுத்துவிட்டது.
உண்மையில் சாண்டா கிளாஸ் என்பது சின்டர்கிளாஸ் அல்லது செயிண்ட் நிக்கோலஸ் என்ற பெயரில் இருந்து உருவானது. அது கிறிஸ்தவ பிஷப் செயின்ட் நிக்கோலஸ் என்பவருடன் தொடர்பைக் கொண்டுள்ளது. இவரது உடல் தற்போது துருக்கி அமைந்துள்ள ஸ்மிர்னா என்ற இடத்தில் புதைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. எனவே, சாண்டா அந்த பகுதியைச் சேர்ந்தவராகவே இருக்கலாம் என்கிறார்கள். மொத்தத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையில், மரம், கேக் போன்றவைகள் போல, சாண்டா தாத்தாவும் விளங்குகிறார்.