டிசம்பர் 25, சென்னை (Astrology Tips): கும்ப ராசியில் இருக்கும் சதயம் (Sadhayam) நட்சத்திரகாரர்களே, 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை நமது ஜென்ம நட்சத்திரத்திற்கு சனி பகவான் வருவார். வந்து, நம் நட்சத்திரத்தில் இருக்கும் ஒரு வருடமும் , நம்மை ஒரு வழி பண்ணாமல் விடமாட்டார். நாம் செய்த பாவங்களை எல்லாம் ஒன்று விடாமல் கணக்கெடுத்து நைய புடைத்துக் கொண்டிருப்பார். சிலர் ஊரைவிட்டே ஓடி விடுவார்கள். சிலர் படுத்த படுக்கையாகி கிடப்பார்கள். சிலர் ஆஸ்பத்திரியில் வாசம் செய்வார்கள். சிலர் தலைமறைவு வாழ்க்கை நடத்துவார்கள். ஆண்டவா என்னை காப்பாற்ற யாருமே இல்லையா என்றும் மனம் விட்டு அழுது புலம்பி கொண்டு இருப்பீர்கள். நீதிமான் மற்றும் நேர்மையானவர் என்று பெயர் எடுத்த சனீஸ்வரர், நம் பாவ புண்ணியங்களை சீர்தூக்கி பார்த்து நம்மை லாடம் கட்டும் நேரம் இது!
சதயம் நட்சத்திரகாரர் பலன்கள்:
ஜென்மச் சனி நம் நட்சத்திரத்தில் வரும் போது, ஒரு வருடம் நம்மை படாதபாடு படுத்தி விடுவார், அப்படி படாத பாடு பட்டு கொண்டிருக்கும் சதயம் நட்சத்திரக்காரர்களே, கவலைப்பட வேண்டாம். உங்களுடைய துன்பங்கள், தொல்லைகள், கஷ்ட, நஷ்டங்கள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனி போல மறைந்துவிடும். எப்போது என்றால் வரும் பங்குனி மாதம் முதல் நீங்கள் முழுமையான ஒரு வெற்றிகரமான பாதையிலே பயணிப்பீர்கள். உங்கள் பண நெருக்கடி தீரும். ஆரோக்கியம் கூடும், திருமணம் நடைபெறும், இடம் வாங்குவீர்கள், நகைகளை திருப்புவீர்கள், தொழில் வெற்றிகரமாக நடக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். வெளிநாடு போக தயார் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வெளிநாடு செல்வீர்கள். நீண்ட தூர பிரயாணங்கள் அமையும். எல்லாம் வெற்றிகரமாக நடக்கும். Astrology: 2025 ஆம் ஆண்டு அவிட்டம் நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!
மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.பு திய மேல் படிப்பில் சேருவீர்கள். தடைப்பட்ட கல்வி தொடரும். தடைபட்ட வேலைகள் கிடைக்கும். உங்கள் தடைகள் அனைத்தும் தூள், தூளாகிவிடும். நீங்கள் தற்போது செல்ல வேண்டிய கோயில் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலுக்கு சென்று அவரை வழிபட்டு வாருங்கள். நிச்சயம் உங்களுடைய கெடுபலன்கள் குறையும். தற்போது ,அரசியல்வாதிகள் பீஸ் போன பல்பாக இருப்பார்கள். அரசு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு கூட இருக்கலாம். சுய தொழில் உள்ளவர்கள் வியாபாரமே இல்லாமல் படுத்த படுக்கையாகி கிடப்பார்கள். வீட்டிலே குடும்பத்திலே, சண்டை சச்சரவு, பண பிரச்சனை, நிம்மதியின்மை, தூக்கமின்மை மற்றும் சிலர் கடன் தொல்லையால் பயந்து கொண்டு வெளியூருக்கு சென்றிருப்பார்கள். இந்த நிலை மாசி மாதம் வரை இருக்கும். பங்குனி மாதம் பிறந்த உடன் உங்கள் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்துவிடும். அப்போதுதான் உங்கள் முகத்தில் ஒரு புன்முறுமலை, சிரிப்பை காண முடியும். அதுவரை அடாது மழை பெய்தாலும் நீங்கள், விடாது கோயிலுக்கு சென்று சனீஸ்வரரை மற்றும் சிவபெருமானை இறுக பற்றி கொள்ளுங்கள்.
இனி வாழ்க்கையில் எந்த தவறும் செய்ய மாட்டேன் என்று உறுதி எடுங்கள். நல்ல சூழ்நிலை வந்தவுடன் "பழைய குருடி கதவை திறடி" என்ற மாதிரி மறுபடியும் தீய வழியில் செல்லாதீர்கள். தவறு இழைக்காதீர்கள். பங்குனி மாதம் முதல் புதிய முயற்சிகள் வெற்றி பெறும். தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். திருமண வயதினருக்கு திருமணம் முடியும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். போக்குவரத்தில் கவனம் தேவை. விபத்துக்கள் ஏற்படலாம். சிலர் சிறைக்கு செல்ல வேண்டிய அனுபவங்கள் இருந்திருக்கும். வரும் 7 மாதங்கள் மிகவும் கடினமானவையாகவே இருக்கும். கேதுவின் அமைப்பும் சரியில்லாமல் இருப்பதால், விபத்து, கோர்ட், போலீஸ், கேஸ், சண்டை சச்சரவு ,உடல் நலன் பாதிப்பு ,சொத்துக்களில் வில்லங்கம், மனைவி வழியில் வீண் செலவினங்கள் ஏற்படும். தற்போது கடுமையான பண நெருக்கடியான சூழ்நிலைகள் இருக்கும். யாரிடமும் வீண் விவாதங்கள் செய்ய வேண்டாம். முன் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள், கூடியவரை யாரிடமும் அனாவசியமாக பேசாமல் இருப்பதே சிறந்தது.
பரிகாரம்:
உங்கள் ஜாதகம் நன்றாக இருந்தாலும் கூட ,ஜென்ம சனி என்று சொல்லக்கூடிய நமது நட்சத்திரத்தில் சனீஸ்வரர் ஒரு வருடம் இருக்கும் பொழுது கண்டிப்பாக தொழில் ரீதியாக, உடல் ரீதியாக பல பிரச்சினைகளை உண்டு பண்ண கூடிய அமைப்பிலே இருப்பார், அவற்றைக் கண்டு துவண்டு விடாமல், முடிந்தால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கோயிலுக்கு சென்று வாருங்கள். கோயிலுக்கு செல்ல முடியவில்லை என்றால் வீட்டிலேயே இறை வழிபாடு செய்யுங்கள். வீட்டிலும் செய்ய முடியலை என்றால் மனதுக்குள்ளேயே சனீஸ்வரா போற்றி என்று சொல்லிக் கொண்டே இருங்கள். அல்லது மனதிற்குள்ளேயே ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டே வாருங்கள். நிச்சயமாக கெடு பலன்கள் குறையும். நவக்கிரக சனி வழிபாடு நன்மை தரும். சிவ வழிபாடு சிறப்பை தரும். துர்க்கை வழிபாடு துன்பத்தை போக்கும்.
மார்ச் மாதம் வரை உங்கள் மதிப்பெண் 30. மார்ச்சுக்கு பிறகு 80.
இது கோச்சார ரீதியான பலன் மட்டுமே.