சென்னை: பொங்கலுக்கு சொந்த ஊர் பயணமா? எந்த பேருந்து நிலையத்தில் உங்க ஊர் பஸ்? விபரம் உள்ளே.!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

SETC Bus (Photo Credit: @ArasuBus X)

ஜனவரி 08, சென்னை (Festival News): பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு ஜனவரி 14 முதல் 19 வரை விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை நாட்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம். அதனால் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்பு பேருந்து, சிறப்பு ரயில், இயக்கப்படுகின்றது. அந்தவகையில் தமிழகத்தில் சென்னையில் இருந்து 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள்:

இதுகுறித்து போக்குவரத்து துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், 2025-ஆம் ஆண்டு வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு. போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் பொங்கல் சிறப்பு பேருந்துகள் (Pongal special bus) இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம்மானது, போக்குவரத்துத் துறை அமைச்சர் சி.சிவசங்கர் அவர்களின் தலைமையில், 6 ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. Mattu Pongal 2025: "உழவனின் நண்பனுக்கு நன்றி சொல்லும் நாள்" - இனிய மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்.!

அதில், பொங்கல் திருநாளை முன்னிட்டு வரும் 10/01/2025 முதல் 13/01/2025 வரையில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2092 பேருந்துகளுடன், 5,736 சிறப்புப் பேருந்துகள் என நான்கு நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, 14,104 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட நாட்களுக்கு 7,800 சிறப்பு பேருந்துகள் ஆக மொத்தம் 21,904 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொங்கல் திருநாள் முடிந்த பின்னர். பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிளுக்காக 15/01/2025 முதல் 19/01/2025 வரையில், தினசரி இயக்கக் கூடிய 10,480 பேருந்துகளுடன் 5,290 சிறப்புப் பேருந்துகளும் ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 6,926 என ஆக மொத்தம் 22,676 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

பேருந்து வழித்தடம்:

பொங்கல் திருநாள் முடிந்த பின்னர். பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிளுக்காக 15/01/2025 முதல் 19/01/2025 வரையில், தினசரி இயக்கக் கூடிய 10,480 பேருந்துகளுடன் 5,290 சிறப்புப் பேருந்துகளும் ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 6,926 என ஆக மொத்தம் 22,676 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. கிழக்கு கடற்கரை சாலை, காஞ்சீபுரம், வேலூர், பெங்களூரு மற்றும் திருத்தணி வழியாக செல்லும் பஸ்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும், பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா வழியாக செல்லும் பஸ்கள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பஸ்கள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படும்.

  • கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோவை, கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் இயக்கப்படும்.
  • கிளாம்பாக்கம் மாநகர பேருந்து நிலையத்திலிருந்து, வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் இயக்கப்படும்.
  • கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து, கிழக்கு கடற்கரை சாலை (ECR), காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு, திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
  • மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து, பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநில மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள் இயக்கப்படும். Pongal Kolam 2025: பொங்கலுக்கு இப்படி கோலங்களை போடுங்க.. ஏரியாவே வாய்ப்பிளக்கும்.!

சிறப்பு பேருந்து முன்பதிவு:

சிறப்பு பேருந்து முன்பதிவு 10 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த முன்பதிவு காலை 7.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை செய்ய முடியும். கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT), கிளாம்பாக்கம், கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பொங்கல் சிறப்பு பேருந்து முன்பதிவு செய்யலாம். ஆன்லைன் வழியாக tnstc official app மற்றும் www.tnstc.in போன்ற இணைய தளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புகார்:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக 94450 14436 என்ற தொலைபேசி எண்ணை (24×7) மணி நேரமும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 8151 (Toll Free Number) மற்றும் 044- 24749002, 044-26280445, 044-26281611 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள எதுவாக பல்வேறு இடங்களில் தகவல் மையங்கள் (May I Help You) அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Tags

Pongal Special Bus Today News Live News Tamil Today News in Tamil News Today News Live News இன்றைய செய்திகள் Tamilnadu Festival News Pongal Pongal 2025 Pongal Festival Pongal Holidays 2025 Pongal Leave TN Pongal Holidays Thai Pongal Thai Pongal 2025 Pongal Pandigai Pongal 2025 Date Bhogi Mattu Pongal Kaanum Pongal தமிழ்நாடு திருவிழா செய்திகள் பொங்கல் பொங்கல் பண்டிகை பொங்கல் 2025 பொங்கல் விடுமுறை 2025 தைப்பொங்கல் தைப்பொங்கல் 2025 போகிப் பண்டிகை மாட்டுப் பொங்கல் காணும் பொங்கல் உழவர் திருநாள் Mattu Pongal 2025 ஜல்லிக்கட்டு Jallikattu சென்னை சிறப்பு பேருந்து போக்குவரத்து துறை special bus பேருந்து வழித்தடம் கிளாம்பாக்கம் புதுச்சேரி கடலூர் சிதம்பரம் திருச்சி மதுரை தூத்துக்குடி செங்கோட்டை திருநெல்வேலி சேலம் கோவை கும்பகோணம் தஞ்சாவூர் கோயம்பேடு ECR காஞ்சிபுரம் வேலூர் பெங்களூரு திருத்தணி மாதவரம் பொன்னேரி ஊத்துக்கோட்டை திருவண்ணாமலை பேருந்துகள்

Share Now