ஜனவரி 08, சென்னை (Festival News): தமிழர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் ஒரு விழாவாக பொங்கல் பண்டிகை (Pongal Festival) கொண்டாடப்படுகிறது. இது விவசாயம், தமிழர்களின் கலாச்சாரம், இயற்கை ஆகியவற்றை ஒன்றிணைத்து கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். தை மாதத்தின் முதல் நாளில் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. நெல், மஞ்சள், கரும்பு போன்ற பயிர்களுக்கு அறுவடைத் திருநாளாகவும், வருடத்தில் நல்ல விளைச்சலுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தை மாதம் முதல் நாளில் இருந்து கொண்டாடப்படும் நான்கு நாள் திருவிழாவாகும்.
2025 பொங்கல் பண்டிகை தேதி:
போகி பண்டிகை - 13 ஜனவரி 2025 - திங்கள் கிழமை
தைப்பொங்கல் - 14 ஜனவரி 2025 - செவ்வாய் கிழமை
மாட்டுப் பொங்கல் - 15 ஜனவரி 2025 - புதன் கிழமை
காணும் பொங்கல் - 16 ஜனவரி 2025 - வியாழன் கிழமை. Bhogi Festival 2025: "பழையன கழிதலும் புதியன புகுதலும்" - போகி பண்டிகை 2025 வரலாறு, அசத்தல் விளக்கங்கள் இதோ.!
பொங்கல் பண்டிகை:
பொங்கல் பண்டிகையின் முந்தைய நாள் போகி (Bhogi) ஆகும். இந்நாளில் பழையவற்றை விடுத்து புதியதாய் தொடங்குவது வழக்கம். வீடு முழுவதையும் சுத்தம் செய்து, பழைய பொருட்களை எரிப்பது போகி பண்டிகையாகும். தைப்பொங்கல் என்பது பொங்கல் பண்டிகையின் மிக முக்கியமான நாளாகும். இந்நாளில் விவசாயிகள் தங்கள் நன்றியை நிலம், பசுமாடு, மற்றும் சூரியனை நோக்கி தெரிவிக்கின்றனர். புதிதாக அறுவடை செய்த அரிசி, நெய் சேர்த்து 'பொங்கல்' எனப்படும் சிறப்பு உணவு தயாரிக்கப்படுகிறது. தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் மறுநாள், விவசாயத்தின் அடிப்படையான மாடுகளைப் போற்றி கௌரவிக்கும் நாளாக மாட்டுப் பொங்கல் (Mattu Pongal) கொண்டாடப்படுகிறது. இறுதி நாள், காணும் பொங்கல் (Kaanum Pongal) இது பொங்கல் பண்டிகையின் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும் ஒரு நாள்.
பொங்கல் கோலம் (Pongal Kolam):
பொங்கல் பண்டிகையின் அலங்காரத்தில் மிக முக்கியமானது கோலம். பொங்கல் பானை, காளை மாடு, கரும்பு, சூரியன் ஆகிய கூறுகளுடன் பல்வேறு வடிவமைப்புகளைக் கொண்டிருக்கலாம். பூக்கோலம், விளக்கு கோலம் போடலாம். பூக்களை கொண்டும் கோலங்கள் போடலாம். கோலம் என்பது மாவுக்கோலம், பொடிக் கோலம், மாக்கோலம், வண்ணக்கோலம், பூக்கோலம், 3-டி கோலம், அச்சுக்கோலம், பிளாஸ்டிக்கில் அச்சிடப்பட்ட கோலம், கம்ப்யூட்டர் கோலம், மணிக் கோலம் ரங்கோலி என மலர்ந்துக் கொண்டே இருக்கிறது. Pongal 2025: "தை பிறந்தால் வழி பிறக்கும்" 2025 பொங்கல் வைக்க உகந்த நேரம்.. சிறப்புகள் இதோ..!
பொங்கல் விழாவை வண்ணமயமாக்கும் கோலங்கள்:
கோலங்கள் டிசைன்கள்:
View this post on Instagram
பொங்கல் கோலம்:
View this post on Instagram
பொங்கல் கோலம்:
View this post on Instagram