Chris Mom Chris Child Game: கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: குட்டிஸ்களுக்கு பிடித்த சீக்ரட் சாண்டா கேம்.. அசத்தல் டிப்ஸ் இதோ.!

சீக்ரட் சாண்டா அல்லது கிரிஸ் மாம் கிரிஸ் சைல்டு விளையாடும் முறை பற்றி இப்பதிவில் நாம் காணலாம்.

Chris mom (Photo Credit: LatestLY)

டிசம்பர் 17, சென்னை (Festival News): கிறிஸ்துமஸ் பண்டிகை (Christmas) என்றாலே கேக், மிட்டாய், பரிசுகள், வண்ண விளக்குகள், குளிர்காக உணவுகள் மேலும் புது வருடம் தொடங்கப்போகும் உற்சாகம் என கலைகட்டி கொண்டுதான் இருக்கும். இத்துடன் சிறியவர்கள் முதல் பெரியவர்களுக்கான ஒரு விளையாட்டையும் அறிமுகப்படுத்துகிறோம். சீக்ரட் சாண்டா (The Secret Santa) அல்லது கிரிஸ் மாம் கிரிஸ் சைல்டு (Chris Mom Chris Child) என்று வெளிநாடுகளில் இந்த விளையாட்டு பிரபலாக உள்ளது. இந்த விளையாட்டை பள்ளி, கல்லூரி, அலுவலக நண்பர்களுடனும், வீட்டு பகுதி நண்பர்களுடனும் குடும்பத்தாருடனும் விளையாடலாம். இனி விளையாட்டை எப்படி விளையாடுவது என்று பார்க்கலாம்.

கிரிஸ் மாம் கிரிஸ் சைல்டு விளையாடும் முறை:

முதலில் ஒரு குழுவாக நண்பர்களை சேர்த்துக் கொண்டு அவர்களின் பெயர்களை துண்டு சீட்டுகளில் எழுதி போட்டு குலுக்கி வைத்துகொள்ள வேண்டும். பின் அனைவரும் தனித்தனியாக ஒரு சீட்டை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். தங்களுக்கு வந்த பெயர்களை வெளியில் சொல்லக் கூடாது. அந்த சீட்டுகளில் யாருடைய பெயர் வந்ததோ அவர்கள் கிறிஸ் சைல்டுகள் ஆவார்கள். அவர்களுக்கு தினமும் ஒரு சுவாரசியமான விளையாட்டுகள் (டாஸ்க்) எழுதிக் கொடுக்கலாம். Astrology: 2025 ஆம் ஆண்டு அனுஷம் நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!

அதை நீங்கள் தான் கொடுத்தீர்கள் என்று தெரியாதவாறு மறைமுகமாகவோ யாரிடமோ கொடுத்து அனுப்பலாம். நீங்கள் கொடுத்த டாஸ்கை அவர்கள் செய்து விட்டால் மறுநாள் டாஸ்க் கொடுக்கையில் மிட்டாய் அல்லது கிஃப்ட் சேர்த்து கொடுக்கலாம். அதே போல் உங்கள் பெயர் யாரிடம் சென்றதோ அவர்கள் உங்களுக்கு தரும் டாஸ்க்கை நீங்களும் செய்ய வேண்டும். தினமும் இதே போல் செய்து விளையாட்டை தொடர வேண்டும். இறுதியாக கிறிஸ்துமஸ் அன்று பரிசு ஒன்றை அவர்களுக்கு கொடுத்து தெரியப்படுத்த வேண்டும்.

தினமும் டாஸ்க்குகள் கொடுத்து விளையாடுகையில் சுவாரசியமாக இருக்கும். கிறிஸ்துமஸ் வர ஒரு வாரமே உள்ள நிலையில் இன்றையிலிருந்தே விளையாட்டைத் துவங்கலாமே..