Astrology: 2025 ஆம் ஆண்டு பூரட்டாதி நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!

2025 ஆம் ஆண்டு பூரட்டாதி நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதனைப் பற்றி இப்பதிவில் நாம் காணலாம்.

ASTRO (Photo Credit: Pixabay)

டிசம்பர் 26, சென்னை (Astrology Tips): கும்ப ராசி மற்றும் மீன ராசியில் இருக்கும் பூரட்டாதி (Poorattadhi) நட்சத்திரக்காரர்களே, பால், மோர், தயிர், நெய் பிரியர்களே, சாந்தமான குணம் உடையவர்களே, பிறர் அவதூறாக உங்களைக் கூறினால் பொறுக்க முடியாதவர்களே, உங்களுக்கு, தற்போது கோட்சார பலன்களின் அடிப்படையில், உங்கள் வாழ்க்கை ஒரு தெளிந்த நீரோடை போல சென்று கொண்டிருக்கிறது. வரும் பங்குனி மாதம் முதல் இனி எந்த பிரச்சனை வந்தாலும் அதை எதிர் கொள்ளக்கூடிய ஆற்றலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். முக்கியமாக ஜென்ம நட்சத்திரத்திற்கு சனீஸ்வரர் வருவதால், இந்த ஆண்டு உடல் நலனில் கவனமாக இருக்க வேண்டும். பண நெருக்கடி ஏற்படும், கடன் தொல்லை அதிகரிக்கும். சொத்துக்களை விற்று அவற்றை பைசல் பண்ணக்கூடிய சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் மனக்கசப்பிற்கு ஆளாவார்கள். அதனால் நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

பூரட்டாதி நட்சத்திரகாரர் பலன்கள்:

வீண் பிரச்சனைகள் உங்களைத் தேடி வரும். சுயதொழில் புரிபவர்கள் பெரிதாக லாபத்தை எதிர்பார்க்க முடியாது. தனியார் வேலை பார்ப்பவர்கள், வேலை இழப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் செய்யும் தொழில் இடத்தில் கவனமாகவும், அமைதியாகவும் இருக்கவும். வீண் பேச்சுக்களை தவிர்க்கவும். ஜாதகம் வலுவாக இருந்தாலும், ஜென்ம சனி அவர் வேலையை காட்டுவார். பெரிய அளவில லாபங்கள் எதிர்பார்க்க முடியாது. வண்டி, வாகன வகையில் வீண் செலவினங்கள் ஏற்படும். ஹெல்மெட் அணிவதை மறந்து விடாதீர்கள். பைன் கட்ட போலீஸ் உங்களை தான் கூப்பிடுவார்! திருமண வயதில் இருப்பவர்கள் ஓராண்டிற்கு திருமணத்தை தள்ளிப் போடுவது நல்லது. முடிந்தால் மாசி மாதத்திற்குள் திருமணம் செய்யவும். Astrology: 2025 ஆம் ஆண்டு சதயம் நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!

மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். நீண்ட தூர பிரயாணங்கள், வெளிநாடு முயற்சிகளை தள்ளிப் போடவும். மீறி இவற்றை மேற்கொண்டால் வீண் அலைச்சல், சென்ற இடத்தில் பிரச்சனைகள்,மற்றும் நீங்கள் எதிர்பார்த்த சூழ்நிலை இருக்காது. அதனால் பல பிரச்சினைகளை உடல் ரீதியாக, மனரீதியாக எதிர்கொள்ள நேரிடும். அரசு அதிகாரிகள் மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் மேலதிகாரிகளிடம் கெட்ட பெயர் வாங்குவது, பொது மக்களின் மூலம் பிரச்சனைகளை சந்திப்பது போன்ற பிரச்சனைகளை எதிர் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு மார்ச் மாதத்திற்கு மேல் ஓராண்டு பெரியளவு நன்மை இருக்காது. இருக்கும் பதவியை தக்க வைத்துக் கொள்வதே சிறப்பான ஒன்று. பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் மார்ச்சுக்கு மேல் எந்த புதிய முயற்சியிலும் ஈடுபடக் கூடாது. அப்படி ஈடுபட்டால் அதனால் எதிர்மறையான விளைவுகளே ஏற்படும் நீங்கள் நினைத்தபடி இருக்காது.

தற்போது உங்களுக்கு சூழ்நிலை சாதகமாக இருக்கிறது. ராகு, கேது மற்றும் சனியின் பரிபூரண ஆசீர்வாதம் வரும் மாசி மாதம் வரை உங்களுக்கு உண்டு. மிக முக்கியமான காரியங்களை இந்த மாசி மாதத்திற்குள் நிறைவேற்றிக் கொள்வது நல்லது. பெண்கள் குடும்பத்தில் பல பிரச்சனைகளை சந்திப்பீர்கள். நகையை அடகு வைப்பது ,பண நெருக்கடி உடல்நல பிரச்சனை, கணவன் மனைவி கருத்து வேறுபாடு, சண்டை சச்சரவு, பிரிவு போன்ற பலன்களை சந்திப்பீர்கள். போக்குவரத்தில் கவனம் தேவை. விபத்து, போலீஸ், கோர்ட், கேஸ் என செல்பவர்களும் உண்டு. ஷேர் மார்க்கெட்டில் மாசி மாதத்திற்கு பிறகு டிரேடிங் செய்வதை குறைத்துக் கொள்ளவும். கமிஷன் அடிப்படையில் வேலை செய்பவர்கள் பல இழுபறிக்கு பின்னரே உங்களுக்கு கமிஷன் தொகை கிடைக்கும். கலைத்துறையினருக்கு மாசி மாதத்திற்கு மேல் பெரிய அளவில் நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது. புதிய ஒப்பந்தங்கள் ஒரு சில உங்களுக்கு கிடைத்தாலும், அவற்றில் இழுபறி நீடிக்கும்.

பரிகாரம்:

உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் உச்சமாகவோ, ஆட்சியாகவோ இருந்தால் இந்த சனியின் கெடு பலன்களை ஓரளவு சமாளிப்பீர்கள். ஆன்மீக ஈடுபாடு உண்டு. சாதுக்கள் தரிசனம், திருக்கோயில் செல்வது, திடீர் அதிர்ஷ்டங்கள் மாசி வரை ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பத்திரம் பதிவு செய்வது, பூர்வீக இடங்களை விற்பனை செய்வது, இடம் வாங்குவது, வீடு கட்டுவது போன்ற விஷயங்களை மாசி மாதம் வரை செய்து கொள்ளலாம். அதற்குப் பிறகு இவற்றில் தடை ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. சனீஸ்வர வழிபாடு, ஆஞ்சநேயர் வழிபாடு மற்றும் சிவ வழிபாடு செய்துவர கெடு பலன்கள் கட்டுக்குள் இருக்கும். உங்கள் ஜாதகத்தில் திசை புத்திகள் நன்றாக இருந்தாலும், ஜென்மச் சனியின் பாதிப்பு ஓரளவு இருக்கத்தான் செய்யும். அதற்கு நீங்கள் அர்ச்சனைகள், பூஜைகள் பரிகாரங்கள், தான தர்மங்கள் செய்துவர தலைக்கு வருவது தலைப்பாகையோடு போகும் என்பதை போல பணம் செலவாவது மட்டும் நடைபெறும். நீங்கள் பணம் செலவழிக்க பயந்தால், உடல் நலனை பாதிக்கும். வீண் பிரச்சனைகள் வரும்.

மார்ச் மாதம் வரை உங்கள் மதிப்பெண் 80. மார்ச்சுக்கு பிறகு 40.

இது கோச்சார ரீதியான பலன் மட்டுமே.