Astrology: 2025 ஆம் ஆண்டு ரேவதி நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!
2025 ஆம் ஆண்டு ரேவதி நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதனைப் பற்றி இப்பதிவில் நாம் காணலாம்.
டிசம்பர் 27, சென்னை (Astrology Tips): மீன ராசியில் இருக்கும் ரேவதி (Revathi) நட்சத்திரக்காரர்களே, கடந்த ஒரு வருடமாக வீண் விரைய செலவுகள், உடல் நலக்குறைவு, மருத்துவச் செலவுகள், வீண் பிரச்சனைகள், அபராதம் கட்டுவது, குடும்பத்தில் பிரச்சனைகள், தொழில் மந்தம், தொழிலில் தடைகள், வேலை இழப்பு, வேலை பளு போன்ற பிரச்சனைகளை சந்தித்து வரும் ரேவதி நட்சத்திரக்காரர்களே, இதிலிருந்து எப்போது விடிவு காலம் கிடைக்கும் என்று ஏங்கிக் கொண்டிருக்கும் நண்பர்களே, உங்களுக்கான விடியல் நேரம் நெருங்கி விட்டது. வரும் பங்குனி மாதம் முதல் மிகச் சிறந்த ஒரு அதிர்ஷ்டமான காலகட்டம் வருகின்றது. அதனால் மனம் தளராதீர்கள். நம்பிக்கையோடு செயல்படுங்கள். இதுவரை வீண் வரையச் செலவுகள் வெளியூரு மற்றும் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு சில அசௌகரியங்கள், தொழில் தடைகள் வேலை இழப்பு, சுய தொழில் புரிபவர்களுக்கு வருமானம் குறைவு, தனியாரில் வேலை பார்ப்பவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பது அல்லது கடுமையான வேலை பளு போன்றவற்றை சந்தித்து வரலாம். இவை எல்லாம் வரும் பங்குனி மாதம் முதல் இந்தக் கெடு பலன்கள் நீங்கி நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
ரேவதி நட்சத்திரகாரர் பலன்கள்:
பங்குனி மாதம் முதல் வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். மாணவர்கள் கடுமையாக உழைத்து தேர்ச்சி பெற்று நல்ல மேல்படிப்புகளில் சேர்வார்கள். புதிய தொழில் முயற்சிகளை பங்குனி மாதத்திற்கு மேல் ஆரம்பிக்கலாம். இதுவரை கணவன் மனைவி இடையே இருந்த கசப்புணர்வுகள், சண்டை சச்சரவுகள், நீங்கி ஒரு மன ஒற்றுமையான இனிமையான வாழ்வு ஆரம்பித்து இருக்கும். கூட்டாளிகளால் நன்மை அடையும் நேரம் இதுவரை கூட்டாளிகள், எதிராளிகளாக செயல்பட்டு வந்து இருப்பார்கள். இனிமேல் அவர்களால் நன்மை உண்டாகும். கோர்ட்டு, கேஸ் ,வம்பு வழக்குகளில் சாதகமான நிலை நிலவும் அல்லது கேஸ் முடிவுக்கு வரும். மனைவியால் ,பெண்களால் ஆண்களுக்கு ஆதாயம் உண்டு. பெண்களுக்கு கணவனால் நண்பர்களால் உதவி உண்டு. கூட்டு தொழில் சிறப்பாக நடைபெறும் இதுவரை கோவிலுக்கு கூட செல்ல முடியாமல் இருந்த நீங்கள், இனி அடிக்கடி கோவிலுக்கு சென்று வருவீர்கள். புனித யாத்திரை மேற்கொள்ளலாம். Astrology: 2025 ஆம் ஆண்டு உத்திரட்டாதி நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!
பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கு இது சரியான நேரம். குறிப்பாக திருமண வயதினருக்கு கண்டிப்பாக திருமணம் நடைபெறும். குழந்தை இல்லாதவர்களுக்கு இந்த ஆண்டு கண்டிப்பாக குழந்தை கிடைக்கும். நகைகளை மீட்பார்கள், திடீர் அதிர்ஷ்டங்கள் உங்களைத் தேடி வரும். பூர்வீக சொத்துக்கள் மற்றும் சொத்து வாங்குவது, வீடு கட்டுவது, இடம் வாங்குவது, தேவைப்படும் கடன் கிடைப்பது போன்ற சுப காரியங்கள் நடக்கும் .பெண்கள் நகை மற்றும் ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அரசு அதிகாரிகள் பாராட்டு பெருவீர்கள். பங்குனி மாதத்திற்கு மேல் புதிய பதவி உயர்வு, தொழிலில் சிறப்பு, தேவையான இடத்திற்கு இடமாற்றம் போன்ற நல்ல காரியங்கள் நடக்கும். கலைத்துறையினருக்கு இது ஒரு அதிர்ஷ்டமான நேரம். பங்குனி மாதத்திலிருந்து புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அதன் மூலம் மிகச் சிறப்பான வெற்றி பிரம்மாண்டமான வெற்றி பெற்று உங்கள் புகழ் பெருமை பரவும்.
அரசியல்வாதிகளுக்கு இந்த ஆண்டு புதிய பதவி கிடைக்க பெறுவீர்கள். ஏழரை சனி நடந்து கொண்டிருந்தாலும் இந்த ஆண்டு உங்களை அது பெரிய அளவில் பாதிக்காது. சுப விரய செலவுகளை மட்டுமே உங்களுக்கு ஏற்படுத்தும். குடும்பத்தில் சுப காரியங்களை நடத்தி வைக்கும். நீண்ட தூர பிரயாணங்கள், வெளிநாடு செல்வது, புண்ணிய ஸ்தல யாத்திரை மேற்கொள்வது போன்ற நற்காரியங்கள் இனிதே நடக்கும். ஷேர் மார்க்கெட் ட்ரேடிங்கில் பங்குனி மாதம் முதல் சிறப்பான முன்னேற்றம் வருமானம் உண்டு. நீங்கள் வாங்கி வைக்கும் சேர்கள் நல்ல விலைக்கு உயர்ந்து ஒரு நல்ல அறுவடையை பெறுவீர்கள். நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வண்டி வாகன யோகங்கள் உண்டு. புதிய வண்டி வாங்குவது, கார் வாங்குவது அல்லது வண்டியை புதுப்பிப்பது போன்ற நல்ல பலன்கள் நடைபெறும்.
பரிகாரம்:
இதுவரை கடுமையான சோதனைகளை அனுபவித்து வந்த ரேவதி நட்சத்திரக்காரர்களே, இப்போது இருந்தே உங்களுக்கு படிப்படியான ஒரு முன்னேற்றம் கிடைக்கும் பங்குனி மாதம் முதல் இந்த 2025 ஆண்டு இறுதி வரை மிகச் சிறப்பான ஒரு அதிர்ஷ்டமான ஆண்டாக உங்களுக்கு அமையும். நவகிரக சனி வழிபாடு நன்மை தரும். மதுரை மீனாட்சி அம்மனை வழிபட்டு வாருங்கள். இழந்தவற்றையெல்லாம் மீண்டும் பெறுவீர்கள்.
உங்கள் மதிப்பெண் மார்ச் வரை 50 மார்ச்சுக்கு பிறகு 80.
இது கோச்சார ரீதியான பலன் மட்டுமே.