ASTRO (Photo Credit: Pixabay)

டிசம்பர் 26, சென்னை (Astrology Tips): மீன ராசியில் இருக்கும் உத்திரட்டாதி (Utthirathadhi) நட்சத்திரக்காரர்களே, உங்களுக்கு தற்போது ஏழரை சனி நடந்து கொண்டு இருந்தாலும் அதனுடைய பாதிப்பு தற்போது இருக்காது. சுப விரயச் செலவுகள் ஏற்படும். நீண்ட தூரப் பிரயாணங்கள், வெளிநாடு செல்வது, புதிய முயற்சிகள் போன்றவை வெற்றி தரும். புனித ஸ்தல யாத்திரை, புனிதப் பயணங்கள் மேற்கொள்ளுவது, புதிய கோயில்களுக்கு செல்வது, ஆன்மிக ஈடுபாடு ஆகியவை வெற்றி தரும். அதே நேரத்தில் சில அசவுகரியங்களையும் சந்திப்பீர்கள். இறை வழிபாடு செய்வது, பிரார்த்தனைகளை நிறைவேற்றுவது போன்றவை நடைபெறும். அதே நேரத்தில் சில தடங்கல்களை பிரச்சனைகளை எதிர்கொண்டு அவற்றை நிறைவேற்றுவீர்கள். கடந்த 2024 ஆம் ஆண்டு உங்களுக்கு ஒரு அதிர்ஷ்டமான ஆண்டாக இருந்திருக்கும். அதே நேரத்தில் இந்த ஆண்டு அந்த அளவுக்கு நீங்கள் நன்மையை எதிர்பார்க்க முடியாவிட்டாலும், ஓரளவு நல்ல பலன்கள் நடைபெறும்.

உத்திரட்டாதி நட்சத்திரகாரர் பலன்கள்:

உடல் நலனில் கவனம் தேவை. இதுவரை அமைதியாக சென்று கொண்டிருந்த கணவன் மனைவி குடும்ப வாழ்க்கை, தற்போது சில பிரச்சனைகள் ஏற்பட்டு, கருத்து வேறுபாடுகள், வீண் வாக்குவாதங்கள், சண்டை சச்சரவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. கடன் தொல்லை அதிகரிக்கும். பண நெருக்கடி ஏற்படும். கொடுத்த கடன்கள் சரியான நேரத்தில் வராது. உடல் நலனில் மாசி மாத முதல் முன்னேற்றம் ஏற்படும். நோயில் அவதிப்படுபவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை எடுப்பவர்கள் மற்றும் ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்களுக்கு மாசி மாதம் முதல் படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். தற்போது சோர்வாக அசதியாக இருப்பவர்கள் கூட மாசி மாதத்திற்கு மேல் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். தலையில் இருந்து பாரத்தை இறக்கி வைத்தது போன்ற ஒரு உணர்வோடு சிறப்பாக செயல்படுவீர்கள். ஆனாலும் எந்த காரியங்களிலும் தடைகள் ஏற்பட்டு அதற்குப் பின்னரே வெற்றி கிடைக்கும். Astrology: 2025 ஆம் ஆண்டு பூரட்டாதி நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!

தனியாரில் வேலை பார்ப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். கூட்டாளிகளிடம், பெண்களிடம் கவனமாக இருக்க வேண்டும். கூட்டாளிகளால், பெண்களால் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தற்போது ஆரம்பித்து இருக்கலாம். நண்பர்களால் உதவி உண்டு. மாணவர்கள் சிறப்பான முறையில் தேர்ச்சி பெறுவார்கள். அதைப்போல மேல்படிப்பு மற்றும் வேலைக்கு செல்வதற்கு இழுபறிக்கு பின்னர் ஒரு நல்ல வேலை, நல்ல கல்வி வாய்ப்பு கிடைக்கும். பெண்களுக்கு கணவன் மனைவி விஷயத்தில் கருத்து வேறுபாடுகள், மனக்கசப்புகள், வீண் சச்சரவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. குழந்தைகளால், குழந்தைகள் விஷயத்தில் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணம் தடை ஏற்பட்டு கொண்டே போகும். அது உங்கள் ஜாதகத்தையும் பொறுத்தது.

அரசு வேலை பார்ப்பவர்கள், உங்கள் கடமையை சரியாக செய்தால் பிரச்சனை இருக்காது. இருந்தாலும் நீங்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் தற்போது நல்ல பெயர் எடுக்க முடியாது. பதவி உயர்வுகள் தடைபடும். நீங்கள் விரும்பிய இடங்களுக்கு மாறுதல் தற்போது கிடைக்க வாய்ப்பு இல்லை. அரசியல்வாதிகள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் பொதுமக்களிடத்தில் மற்றும் உயர்ந்த பதவியில் இருப்பவர்களிடம் நடந்து கொள்ளவும். பிரச்சனைகள், பதவி இழப்பு அல்லது அதிருப்தி ஆன சூழ்நிலை நிலவுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஷேர் மார்க்கெட் ட்ரேடிங்கில் மாசி மாதத்திற்கு மேல் நல்ல முன்னேற்றம் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. விளையாட்டு துறையில் இருப்பவர்களுக்கு மாசி மாதத்திற்கு மேல் சிறப்பான வாய்ப்புகள் அமையும் உங்கள் திறமையை வெளிக்காட்டுவதற்கு நல்ல வாய்ப்புகள் அமையும். இருந்தாலும் அவை கடினமான முயற்சிக்குப் பின்னரே வெற்றி கிடைக்கும்.

கலை துறையினருக்கு இந்த ஆண்டு புதிய ஒப்பந்தங்கள் நீண்ட இழுபறிக்கு பின்னரே அமையும். அதில் உங்கள் திறமையை காட்டுவதற்குரிய வாய்ப்புகள் குறைவு. புதிய தொழில் முயற்சியில் இறங்கினாலும் உடனடியாக பொருளாதார ரீதியாக முன்னேற்றம் கிடைப்பது கடினம். புது வேலை வாய்ப்புகள் கிடைத்தாலும் நீங்கள் எதிர்பார்த்த சம்பளம் கிடைக்காது. ஆனாலும் கிடைத்த வேலை வாய்ப்பை விட்டு விடாதீர்கள். அது ஏழு மாதங்களுக்கு பிறகு உங்களுக்கு ஒரு நல்ல வருமானத்தை பதவி உயர்வை ஏற்படுத்திக் கொடுக்கும். கமிஷன் தொழிலில் இருப்பவர்களுக்கு மாசி மாதத்திற்கு பிறகு நல்ல முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. பூர்வீக சொத்துக்கள் முடிப்பது, இடம் வாங்குவது, இடத்தை விற்பது போன்ற விஷயங்கள் நீண்ட இழுபறிக்கு பின்னரே வெற்றி அடையும்.

பரிகாரம்:

முடிந்தவரை கோவிலுக்கு சென்று அர்ச்சனைகள், பூஜைகள், பரிகாரங்கள், தான தர்மங்கள் செய்துவர உங்களுடைய கெடு பலன்கள் குறைந்து நற்பலன்கள் உண்டாகும். விநாயகர் வழிபாடு வெற்றி தரும் துர்க்கை வழிபாடு துன்பத்தை போக்கும்.

உங்களின் மதிப்பெண் 60

இது கோச்சார ரீதியான பலன் மட்டுமே.