Kaanum Pongal: "காளையர்கள் கன்னியரை வட்டமிட.. காணாத பெரிவர்கள் கும்மாளமிட.." உங்களுக்கான இனிய காணும் பொங்கல் வாழ்த்துகள் இதோ.!
உற்றார்-உறவினர்கள், நண்பர்களிடம் நெருக்கத்தை அதிகரித்து, வாழ்க்கையை நல்ல கருத்துக்களுடன் முன்னெடுத்துச்செல்ல காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
ஜனவரி 15, சென்னை (Festival News Tamil): தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான, உழவுக்கு உதவும் கதிரவனுக்கும், பசுவுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்படும் பொங்கல் (Pongal 2025) பண்டிகையின் நான்காம் நாள், காணும் பொங்கல் (Kaanum Pongal) கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கல் கன்னிப் பொங்கல் (Kanni Pongal) என்றும் அழைக்கப்படுகிறது. பழைய கசப்பு எண்ணங்களை தூக்கி எரிந்து போகியை கொண்டாடி, கதிரவனுக்கு நன்றி சொல்லி தைப்பொங்கலை வரவேற்று, உழவுக்கு உறுதுணையாக இருக்கும் பசுவுக்கு நன்றிசொல்லி மாட்டுப்பொங்கல் கொண்டாடி, புதிய எண்ணத்துடன் பயணத்தை தொடங்க, உற்றார்-உறவினர்களிடம் ஆசிபெற காணும் பொங்கல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
காணும் பொங்கலின் நோக்கம்:
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற தென்னிந்திய மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் காணும் பொங்கல், திருவள்ளுவர் நாளாகவும் (Thiruvalluvar Day) சிறப்பிக்கப்படுகிறது. காணும் என்ற சொல்லுக்கு, காண்பதும்-பார்ப்பதும் என்று பொருள். பொங்கல் பண்டிகையை கொண்டாடி முடிக்கும் அதே வேளையில், உற்றார்-உறவினர்களுடன் நட்பை பாராட்டி, அதனை நல்ல வகையிலான முன்னேற்றத்துடன் எடுத்துச் செல்லும் வகையில், உறவினர்களின் வீட்டிற்கு சென்று அவர்களிடம் ஆசிபெற்று, நல்ல கருத்துக்களை பகிர்ந்து வருவது காணும் பொங்கலாக கவனிக்கப்படுகிறது. திருமணமாகாத பெண்கள் இந்த நாளில் நல்ல எதிர்காலம் அமைய கடவுளை பிரார்த்தித்து குடும்பத்தினரிடம் ஆசி வாங்குவது கன்னிப் பொங்கல் பண்டிகையாகவும் கவனிக்கப்படுகிறது. Alanganallur Jallikattu 2025: உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. எங்கே, எப்போது நடைபெறும்? விபரம் உள்ளே.!
கன்னிப்பொங்கல்:
அதேநேரத்தில், திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள், தனக்கு நல்ல துணை வேண்டி விரதம் இருந்து பொங்கல் வைத்து வழிபடுவது கன்னிப் பொங்கல் ஆகவும் கவனிக்கப்படுகிறது. அன்றைய நாளில் பொங்கல் வைத்து வழிபட நினைக்கும் பெண்கள், பொங்கல் பானையில் மஞ்சள் திலகம் இட்டு சுமங்கலிகளின் கையில் கொடுத்த ஆசி பெற்று பொங்கல் வைத்து வழிபடுவது நல்லது. அன்று பொங்கல் வைக்க நல்ல நேரமாக காலை 10:30 முதல் 11:30 வரை கணிக்கப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தலாம். பெற்றோர், தாத்தா-பாட்டி ஆகியோரிடம் ஆசிபெறலாம்.
காணும் பொங்கல் வாழ்த்து 2025 (Kaanum Pongal Wishes Tamil 2025):
1.நண்பர்கள் மற்றும் உறவினர்கள்
சந்தித்து மகிழ்திட
இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்
2.நண்பர்களை நேசிக்கவும்
உறவுகளை போற்றவும்
பெரியோரை வணங்கவும்
தமிழர்கள் உருவாக்கிய
தனிப்பெரும் பண்டிகை
காணும் பொங்கல்
3.பண்டிகை காலங்களில்
உறவுகளை காண வேண்டும்
என்பதற்காக கொண்டாடப்படுகிறது
இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்
4.காண வேண்டும் காணும் பொங்கல்
சொந்தங்களை தேடி நீங்கள்
களிப்புடன் இன்று காண்போம்
காணும் பொங்கல் கொண்டாடுவோம்
இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்
5.குடும்பம் முழுதும் கூடி இருக்கும்
கும்மாளமாய் நல்ல சந்தோசமாய்
உரிமையோடு முறை சொல்லி
உறவுகள் பகிர்ந்து கொள்ளும்
இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்
6.ஆறு குளங்களில் கூடி
உணவருந்தி கொண்டாடினான்
தமிழர் திருநாளாக, தமிழன்
இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்
7.காணும் உறவுகள் எல்லாம்
நம் சொந்தங்களாக
மலரட்டும் இனிய
காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
8.சொந்தங்களை சந்தித்து
அன்பு பொங்க மகிழ்ந்திட
காணும் பொங்கல் வாழ்த்துக்கள்
9.பகைமையை விட்டுவிட்டு
அன்பை அனைவரிடமும்
பரப்புவோம் அன்புடன்
இனிய காணும் பொங்கல் நல்வாழ்த்துகள்
10.காளையர்கள் கன்னியரை வட்டமிட
காணாத பெரிவர்கள் கும்மாளமிட
களிப்புடன் இன்று காண்போம்
காணும் பொங்கல் கொண்டாடுவோம் !
தித்திக்கும் கரும்பு போல, இனி வரும் நாட்களில் பொங்கல் பண்டிகையைப்போல உங்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) வாழ்த்துகிறது.
Thai Pongal 2025 Images & Thai Pongal Wishes WhatsApp Status Messages, HD Wallpapers, Quotes and SMS To Share on Pongal Wishes in Tamil
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)