Vijay Diwas 2024: பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் உருவான வரலாறு.. விஜய் திவாஸ் தினம் இன்று.!

இந்திய ராணுவம், பாகிஸ்தான் ராணுவத்தை வெற்றி கொண்ட தினத்தையே விஜய் திவாஸ் என்ற பெயரில் நமது ராணுவம் ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.

Vijay Diwas (Photo Credit: LatestLY)

டிசம்பர் 16, டெல்லி (Special Day): இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு ஒரு நாள் முன்பாக 1947 ஆகஸ்ட் 14ம் தேதி பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றபோது, அது மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் என இருந்தது. இன்றைய வங்கதேசமே அன்று கிழக்கு பாகிஸ்தானாக இருந்தது. மேற்கு பாகிஸ்தானின் பாகுபாடு, அடக்குமுறை ஆகியற்றால் பாதிக்கப்பட்ட கிழக்குப் பாகிஸ்தான், தனியே விடுதலை பெற விரும்பிப் போராடியது. 1971ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி கிழக்கு பாகிஸ்தான் தனி நாடாக பிரியும் என வங்கதேச தந்தை என போற்றப்படும் சேக் முஜிபுர் ரகுமான் அறிவித்தார். அதோடு, கிழக்கு பாகிஸ்தான் ராணுவ வீரர்களைக் கொண்டு முக்தி வாகினி எனும் படை அமைக்கப்பட்டது. தொடர்ந்து தங்களின் விடுதலைக்கு உதவுமாறு இந்தியாவிடம் கிழக்குப் பாகிஸ்தான் மார்ச் 26, 1971ல் முறைப்படி கோரிக்கை விடுத்தது. Astrology: 2025 ஆம் ஆண்டு விசாகம் நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!

அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, கிழக்குப் பாகிஸ்தானின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தார். `ஆபரேஷன் செங்கிஸ்கான்' எனும் பெயரில் 1971, டிசம்பர் 3-ம் தேதி இந்தியாவின் எட்டு விமான நிலையங்கள்மீது தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான் ராணுவம். இதையடுத்து இந்தியாவின் முப்படைகளும் போரில் இறங்கியது. சுமார் 93,000 பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டனர். போர் டிசம்பர் 16-ல் முடிவுக்கு வந்தது. வெறும் பதிமூன்றே நாட்களில் பாகிஸ்தான் வீழ்ந்தது. இந்த போரில் இந்தியா சார்பில் 3900 ராணுவ வீரர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர், 9,851 வீரர்கள் படுகாயமடைந்தனர். இந்த போரில் உயிர் நீத்த வீரர்களின் நினைவாக விஜய் திவாஸ் (Vijay Diwas) கொண்டாடப்படுகிறது