World Children's Day 2024: "இந்த உலகத்தை ஒளிரச் செய்யும் ஒளி நீங்கள்.." குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்..!
அதேவேளை, உலக குழந்தைகள் தினம் நவம்பர் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
நவம்பர் 20, சென்னை (Special Day): நாட்டில் உள்ள குழந்தைகளை அங்கீகரிப்பதற்காக இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினமாக (Children’s Day) கொண்டாடப்பட்டு வருகிறது. அதேவேளை, உலக குழந்தைகள் தினம் (World Children's Day) நவம்பர் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதன் வாயிலாக உலகம் முழுவதும் வன்முறைக்கு ஆளாகும் மற்றும் உரிமைகள் மறுக்கப்படும் குழந்தைகளுக்கு நிலையான வாழ்வு கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது. இந்நாளில் உலகம் முழுவதும் மக்கள் மத்தியில் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
வரலாறு: குழந்தைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நவம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 1956ல் இருந்து குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 20ஆம் தேதியை உலகளாவிய குழந்தைகள் தினமாக அறிவித்தது. இருப்பினும், 1964 இல் நேரு மறைந்த பின்னர், இந்திய அரசு அவரது பிறந்தநாளை நினைவுகூரும் விதமாக நவம்பர் 14ஆம் தேதி அன்று குழந்தைகள் தினம் கொண்டாட முடிவு செய்தது. பள்ளிகள் முதல் பொதுத்துறை அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் வரை குழந்தைகள் தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்கின்றனர். International Men's Day 2024: "நீ இருக்கும் வாழ்க்கை அழகாக இருக்கிறது" இன்று சர்வதேச ஆண்கள் தினம்..!
குழந்தைகள் தின கவிதைகள்:
- ஒரு சொல் பேச்சிலே உள்ளம் மகிழ வைத்து கள்ளமில்லா சிரிப்பினிலே நெஞ்சம் நெகிழ வைக்கும் மழலைகளுக்கு குழந்தைகள் தின வாழ்த்துகள்.
- இந்த உலகத்தை ஒளிரச் செய்யும் ஒளி நீங்கள் உங்கள் எதிர்காலம் பிரகாசிக்கட்டும்... இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்.
- நாளைய இந்தியாவை உருவாக்கும் இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்.
- துன்பமின்றி பட்டாம்பூச்சிகளாய் சிறகடித்து மகிழ்ச்சியாய் வாழும் குழந்தைகள் அனைவருக்கும் குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்.
- அன்பென்னும் மொழி பேசி, செல்லும் இடமெல்லாம் சீர் பெருக்கித் தேர் நிறுத்தி கல்லும் கனியாகும் கருணையால் நாளைய உலகை ஆளவிருக்கும் குழந்தைகள் அனைவருக்கும், இனிய குழந்தைகள் தின நாள் வாழ்த்துக்கள்...