Aval Kesari Recipe: தித்திக்கும் அவல் கேசரி சுவையாக செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

வீட்டிலேயே சுலபமாக அவல் கேசரி எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Kesari (Photo Credit: YouTube)

டிசம்பர் 13, சென்னை (Kitchen Tips): கார்த்திகை தீப திருவிழா ஸ்பெஷலாக இனிப்பு ரெசிபியை வீட்டிலேயே சுலபமாக செய்யலாம். அந்தவகையில், சுவையான அவல் கேசரி (Aval Kesari) எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். இது மிகவும் சுவையாகவும், அவல் (Aval) பயன்படுத்துவதால் உடலுக்கு தேவையான சத்துக்களும் கிடைக்கின்றன.

தேவையான பொருட்கள்:

அவல் – 1 கப்

பால் – 1 கப்

தண்ணீர் – 1/2 கப்

சர்க்கரை – 1 கப்

ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்

நெய் – 6 டேபிள் ஸ்பூன்

முந்திரி, திராட்சை – 1 டேபிள் ஸ்பூன் Karthigai Deepam Live Watching: பக்தகோடிகளே தயாரா? கார்த்திகை பரணி தீபம்.. நேரலையில் பார்ப்பது எப்படி? லிங்க் இதோ.!

செய்முறை:

வாணலியில் நெய் ஊற்றி, முந்திரி, திராட்சையை முதலில் பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதே வாணலியில் நெய்யில் அவலைப் போட்டு நன்கு வதக்கவும். தொடர்ந்து சூடான பாலும், தண்ணீரும் கலந்து வதங்கும் அவல் கலவையில் ஊற்றவும். அவல் வெந்தவுடன், சர்க்கரை, ஏலக்காய்த் தூள் சேர்த்து இலேசான தீயில் நன்கு சேர்ந்தாற்போல் வரும் வரை கிளறி இறக்கவும். வறுத்த முந்திரி, திராட்சை தூவி பரிமாறவும்.

குறிப்பு: தேவையானால் கேசரி கலரை அவல் கேசரி செய்ய உபயோகிக்கலாம்.