Karthigai Deepam File Pic (Photo Credit: @kryes / @airnews_Chennai X)

டிசம்பர் 13, திருவண்ணாமலை (Tiruvannamalai News): கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, திருவண்ணாமலையில் பல இலட்சக்கணக்கான சிவ பக்தர்கள், அண்ணாமலையாரின் தீப தரிசனத்தை காண நேற்று முதல் குவிந்தனர். இதனால் திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் பூண்டது. விழாவின் முக்கிய நிகழ்வான இன்று, பௌர்ணமியை முன்னிட்டு மகா பரணி தீபம் ஏற்றப்படுகிறது. Karthigai Deepam 2024: கார்த்திகை தீபம் 2024: உள்ளம் கவர்ந்தவருடன் கொண்டாடி மகிழுங்கள் - அசத்தல் கவிதையுடன் சிறந்த வாழ்த்துக்கள் இதோ.! 

பரணி தீபம்:

இதனை முன்னிட்டு இன்று மூலவர் முன்பு தீபம் ஏற்றப்பட்ட நிலையில், மாலை சுமார் 06:00 மணிக்கு மேல் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. திருவண்ணாமலை மலை உச்சியின் மீது ஏற்றப்படும் பரணி தீபம், அண்ணாமலையாரின் அவதாரத்தையும், அவரின் அருளையும் உணர்த்துகிறது என்பதால், திருவண்ணாமலைக்கு நேரில் சென்று பக்தர்கள் பலரும் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

நேரலையில் காணலாம்:

திருவண்ணாமலை செல்ல இயலாதோர், இன்றைய தொழில்நுட்பத்தின் உதவியுடன் வீட்டில் இருந்தபடி அண்ணாமலையாரின் அருளை நேரலையில் பெறலாம். தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை பக்தர்களின் வசதிக்காக, கார்த்திகை தீப நிகழ்வை நேரலை செய்கிறது. அதன் காட்சிகள் உங்களின் பார்வைக்கு.. நேரலையில் இணைந்திருங்கள்.

கார்த்திகை பரணி தீபத்தை நேரலையில் பார்க்க: