Planting Trees: பண மழை கொட்டும் மரம் வளர்ப்பு.. ₹1 கோடி வரை சம்பாதிக்கலாம்..!

உங்கள் குழந்தைகளுக்கான எதிர்காலத்துக்கான முதலீடாக கூட மரங்களை நட்டு வளர்க்கலாம்.

Trees (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 05, சென்னை (Agri Tips): குறைந்த செலவில் அதிக வருமான ஈட்ட உதவுகிறது மரம் வளர்ப்பு. இது உடனடி வருமான தராது. ஆனால், நல்ல முதலீடாக நீண்டகால பலனை தரும். இதற்கு நாம் தேர்ந்தெடுக்கப் போகும் மரத்தை பொறுத்து 6 முதல் 25 வருடங்கள் வரை, ஏன் அதற்கு மேலே கூட ஆகலாம். வழக்கான விவசாயத்தில் இருக்கும் இடுபொருள்களின் விலை ஏற்றம், ஆட்கள் பற்றாக்குறை, பராமரிப்பு செலவு ஆகிய பிரச்சனைகள் இதில் இல்லை என்பதாலும், மரப்பயிர்கள் நடுவே ஊடுபயிர்கள் விளைவித்து கணிசமான வருவாய் ஈட்ட முடியும் என்பது இதில் கூடுதல் லாபம். உங்கள் குழந்தைகளுக்கான எதிர்காலத்துக்கான முதலீடாக கூட மரங்களை நட்டு வளர்க்கலாம்.

சவுக்கு மரம்:

மணல் , வண்டல் மண், செம்மண் நிலங்களில் நன்றாக வளரக் கூடியது சவுக்கு. மிக வேகமாக வளரக்கூடிய இதை ஏக்கருக்கு 4000 கன்றுகள் வைக்கலாம். ஊடு பயிராக நிலக்கடலை வளர்க்கலாம். மணற்பாங்கான நிலங்களில் தர்ப்பூசணியும், செம்மண்ணில் எண்ணெய் வித்து பயிரான எள், கரிசல் மண்ணில் பயறு வகைகளையும் ஊடுபயிராகப் பயிரிடலாம். அவ்வப்போது மரத்தின் முக்கால் பகுதிக்கு கீழ் உள்ள பக்கக்கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். இதன் மூலம் 6-12 மாதங்களில் நல்ல கழிகள் கிடைக்கும். 3-ம் வருடம் முதல் அறுவடையை ஆரம்பிக்கலாம். கட்டட வேலைகளுக்காக, ஏரிபொருள் மற்றும் காகித கூழ், தயாரிக்க சவுக்கு பயன்படுகிறது. ஒரு எக்டருக்கு 125 முதல் 150 டன் மரங்கள் கிடைக்கிறது . அதன் மூலம் தோராயமாக ₹6,25,000 வரை வருமானம் கிடைக்கும். Sani Peyarchi Palan 2025: சனிப் பெயர்ச்சி 2025: ரிஷப ராசிக்கு ஏழரை சனி எப்படி இருக்கப் போகுது தெரியுமா? விபரம் உள்ளே.!

மூங்கில் மரம்:

நல்ல வருமான தரக்கூடிய மூங்கில் சாகுபடிக்கு செம்மண் இருமல் பாடு உள்ள நிலங்கள் ஏற்றவை. தமிழகத்தில் பெருவாரை (பொந்து மூங்கில்) மற்றும் சிறுவாரை (கல் மூங்கில்) ஆகிய முள் உள்ள மூங்கில் இனங்களும், தமிழக வனத்துறை ஆராய்ச்சி பிரிவு அளிக்கும் பேம்பூஸா வல்காரிஸ், பேம்பூஸா நூட்டன்ஸ், பேம்பூஸா டுல்டா, பேம்பூஸா பல்கூவா ஆகிய 4 முள்ளில்லா ரகங்களும் வளர்க்க ஏற்றவை. மற்ற நிலங்களில் குழிகளில் செம்மண் நிரப்பி நடவு செய்யலாம். ஏக்கருக்கு 200 கன்றுகள் வரை நடலாம். 4 ஆண்டுகளில் கழிகளை வெட்டி விற்பனை செய்யலாம். காகித ஆலைகள், ரேயான் தொழிற்சாலைகளில் மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. வலுவாகவும், நீண்டகாலம் கெடாமலும் இருப்பதால், வீடு கட்டவும், கால்நடைத் தீவனங்கள் தயாரிக்கவும், விவசாயத் தொழில்களுக்கும், மேஜை, நாற்காலிகள், கலைப் பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. ஏக்கருக்கு 40 டன் மகசூலும், ₹1,60,000 வரை வருமானமும் கிடைக்கிறது.

பெரு மரம்:

இது பெருமரம் பீமாட்டி, தீக்குச்சிமரம் என்றெல்லாம் அழைக்கப்படும் பெருமரம் ஆஸ்திரேலியாவை தாயகமாக கொண்டிருந்தாலும், தமிழ்நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் இந்த மரத்தை வளர்க்கலாம். இவை வறண்ட பகுதிகளில் நன்கு வளரக்கூடியது. ஏக்கருக்கு 300 மரம் வரை நடலாம். 6 ஆண்டுகளில் பலன் கொடுக்கும். வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் மரப்பெட்டி, தக்காளி பெட்டி, டீ மற்றும் செஸ்ட் கேஸ்கள், பிளைவுட் செய்யவும் பயன்படுகின்றது. தீக்குச்சிகள் தயாரிப்பில் இது பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. பெருமரத்தின் இலைகள் இயற்கை பூச்சிவிரட்டி தயாரிக்கவும், பட்டுப்புழு வளர்க்கவும்,கட்டிட வேலைகளுக்குகான செண்டிரிங்கிற்கும் பயன்படுகின்றன. இந்த மரத்தில் பொம்மைகள், படகு சாமான்கள், பீப்பாய்கள், காகிதம் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. ஏக்கருக்கு 100 டன் வரை மகசூல் கிடைக்கும். இதன் மூலம் ஏக்கருக்கு ₹3,50,000 வரை வருமானம் கிடைக்கும்.

இலவ மரம்:

இது தமிழ்நாட்டில் அனைத்து மண் வகைகளிலும் நன்கு வளரும். நாட்டு ரகம், சிங்கப்பூர் ரகம் என இரண்டு வகைகள் தான் தமிழகத்தில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஏக்கருக்கு 200 மரங்கள் வரை வைக்கலாம். 4 ஆண்டுகளில் இருந்து காய்கள் கிடைக்க ஆரம்பிக்கும். ஆரம்பத்தில் ஒரு மரத்திலிருந்து 100 முதல் 200 காய்களும், பின்பு தொடர்ந்து 400 முதல் 500 காய்கள் வரையும் கிடைக்கும். பஞ்சு, தீக்குச்சி தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. ஒரு ஏக்கரில் உள்ள 200 மரங்களிலிருந்து ஆண்டுக்கு 40,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். அதிகபட்சம் 25 ஆண்டுகள் வரை மகசூல் எடுக்கலாம். அதன்பின், முதிர்ந்த மரங்களை விறகுக்காக விற்கும் போது, ஒரு ஏக்கரில் இருந்து ₹5,00,000 மேல் வருமானம் கிடைக்கும்.

வேங்கை மரம்:

தேக்கிற்கு அடுத்து தரமான மரமாக வேங்கை மரம் கருதப்படுகிறது. வளமான ஆழமான செம்மண் நிலங்கள் மற்றும் மலையை ஒட்டிய சமவெளி பகுதிகளில் இது வளரும். வறட்சியைத் தாங்கி வளரும். ஏக்கருக்கு 200 மரங்கள் வளர்க்கலாம். 10 ஆண்டுகளில் வருமானம் கிடைக்கும்.உளுந்து, பாசிப்பயிறு உள்ளிட்ட பயிர்களை ஊடுபயிராக வளர்க்கலாம். ஜன்னல், மேசை போன்ற மர பொருட்கள் தயாரிக்கவும், கட்டுமானத்திற்கும் பயன்படுகிறது. ஏக்கருக்கு 200 டன் கிடைக்கிறது எனில் அதன் மூலம் ₹10,00,000 வரை வருமானம் கிடைக்கும்.

மலை வேம்பு:

மலை வேம்பு மரங்கள், அனைத்து விதமான மண் வகைகளில் வளரும் தன்மை கொண்டவை. வடிகால் வசதி கொண்ட அனைத்து நிலங்கள் மற்றும் மணல் கலந்த வண்டல் மண் சிறந்தது. ஏக்கருக்கு 200 கன்றுகள் வரை வைக்கலாம். 3-ம் ஆண்டிலிருந்து தீக்குச்சி, 4-ம் ஆண்டிலிருந்து பிளைவுட், 7 ஆண்டுகளுக்கு மேல் மரப்பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுத்தலாம். கன்றுகள் வைத்த முதல் இரண்டு ஆண்டுகளில் பூசணிக்காய், சுரைக்காய் ஆகியவற்றை ஊடுபயிராக வளர்க்கலாம். ஒரு மரம் சராசரியாக ₹10,000 - ₹15,000 வரை விற்கப்படுகிறது. இதன் மூலம் ஏக்கருக்கு ₹20,00,000 வரை வருமானம் ஈட்டமுடியும். Javvarisi Payasam Recipe: அட்டகாசமான சுவையில் ஜவ்வரிசி பாயசம் செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

குமிழ் மரம்:

குமிழ் மரம் அனைத்து வகை மண்ணிலும் வளரக் கூடியது. ஏக்கருக்கு 200 கன்றுகள் வைக்கலாம். குமிழ்மரத்தின் இலை, தழைகள், கால்நடைகளுக்கு தீவனமாகவும், இம்மரம் தீப்பெட்டி, தீக்குச்சி, பிளேவுட் மற்றும் மரக்கூழ் தயாரிக்கவும் பயன்படுகிறது. மேலும் மேஜை, நாற்காலிகள், ஜன்னல்கள், நிலைக்கதவுகள், பலகைகள், பெட்டிகள் மற்றும் தோலக் என்ற இசைக்கருவி செய்ய குமிழ்மரம் பயன்படுகிறது. தோப்புகளில் தேனீக்கள் வளர்த்தும் வருமானம் பெறலாம். நடவு செய்தபின் 8-10 வருடங்களிலிருந்து அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 400 டன் வரை மகசூல் கிடைக்கிறது. இதன் மூலம் ₹14,00,000 வரை வருமானம் கிடைக்கிறது.

தேக்கு மரம்:

தேக்கு மரம் அனைத்து மண்ணிலும் நன்கு வளரக்கூடியது. பெரும்பாலும் வீட்டு உபயோகப்பொருட்கள் செய்ய பயன்படுத்தப்படுகிறது. ஏக்கருக்கு 150 - 200 கன்றுகள் வரை வைக்கலாம். 25 ஆண்டுகளில் அறுவடை செய்யலாம். நீண்ட கால முதலீடாக தான் இருக்கும். நன்கு முதிர்ந்த ஒரு மரம் ₹15,000 முதல் ₹20,000 வரை விற்பனையாகிறது. இதன் மூலம் ஏக்கருக்கு ₹40,00,000 வரை வருமானமாக கிடைக்கிறது.

சந்தன மரம்:

உவர் நிலம் அல்லாத எல்லா நிலப்பகுதிகளிலும் சந்தன மரம் வளரும். ஏக்கருக்கு 200 கன்றுகள் வரை நடலாம். 25 ஆண்டுகளில் இருந்து வருமானம் கொடுக்கும். நன்கு முதிர்ந்த மரங்கள் அதிக விலை மதிப்பை பெறுகின்றன. நறுமணத் தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவத் தேவைக்காகவும், அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. ஒரு மரத்திலிருந்து சராசரியாக 10 கிலோ சந்தனம் பெறப்படுகிறது. தமிழ்நாடு அரசு வனத்துறையின் விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ சந்தனம் ₹5,000 - ₹6,000 வரை ஏலம் போகிறது. அந்த வகையில் ஒரு மரம் ₹50000 வரை விலை போகும். ஒரு ஏக்கரில் உள்ள 200 மரங்களில் இருந்து, 1 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.

செம்மரம்:

ஆந்திராவை தாயகமாக கொண்ட இந்த மரங்கள் வடிகால் வசதி கொண்ட சரளை மண், செம்மண் நிலங்களில் நன்கு வளர்கின்றன. ஏக்கருக்கு 200 கன்றுகள் வரை வைக்கலாம். பல்வேறு துறைகளில் வண்ணமேற்றியாகவும், கதிர்வீச்சு / ஒலி தடுப்பானாகவும் பயன்படுகிறது. இது 20 ஆண்டுகளில் வருமானம் கொடுக்கும். மரத்தின் தரத்தைப் பொறுத்து விலை இருக்கும். ஒரு டன் செம்மரம் ₹20 - ₹25 லட்சம் வரை விலை போகிறது. இதன்மூலம் ஏக்கருக்கு 5 டன் கிடைக்கிறது. இதன் மூலம் ₹1 கோடி வரை வருமானம் கிடைக்கும். மரங்கள் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் அரசு மானியம், மரக்காப்பீடு போன்றவற்றை வழங்கி வருகிறது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now