Javvarisi Payasam (Photo Credit: YouTube)

பிப்ரவரி 04, சென்னை (Kitchen Tips): எப்போதும் போல ஒரே மாதிரியான பாயசம் செய்து சாப்பிடுவதைவிட, வித்தியாசமான முறையில் அதுவும் ஜவ்வரிசி பயன்படுத்தி எப்படி சுவையாக பாயசம் செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம். ஜவ்வரிசி பாயசம் (Javvarisi Payasam) மிகவும் சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி - 125 கிராம்

பால் - 750 மில்லி

சர்க்கரை - 125 கிராம்

ஏலக்காய்த்தூள் - சிறிதளவு

உலர்ந்த திராட்சை - சிறிதளவு

முந்திரிப்பருப்பு - சிறிதளவு

நெய் - ஒரு டீஸ்பூன் Sani Peyarchi Palan 2025: சனிப் பெயர்ச்சி 2025: மேஷ ராசிக்கு ஏழரை சனி எப்படி இருக்கப் போகுது தெரியுமா? விபரம் உள்ளே.!

செய்முறை:

வாய் அகன்ற பாத்திரத்தில் ஜவ்வரிசியைச் சேர்த்து தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊற விடவும். ஜவ்வரிசியின் அளவு பெரியதாகிவிடும். அடுப்பில் அடிப்பகுதி கனமான பாத்திரத்தை வைத்து, பால் ஊற்றி கொதித்ததும் சிம்மில் வைத்து, பால் அரை லிட்டராகும் வரை கொதிக்க விடவும். இதில் ஜவ்வரிசியைச் சேர்த்து நிறம் மாறும் வரை வேக விடவும். இத்துடன் சர்க்கரையைச் சேர்த்துக் கரைய விடவும். ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கி விடவும். அடுப்பில் கடாயை வைத்து நெய் விட்டு முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை வறுத்து பாயசத்தில் சேர்த்து இறக்கிப் பரிமாறவும். சுவையான ஜவ்வரிசி பாயசம் இதோ தயார்.