IPL Auction 2025 Live

Carrot Kheer Recipe: சத்தான கேரட் கீர் செய்வது எப்படி..! விவரம் உள்ளே..!

உடலுக்கு குளிர்ச்சியாக சத்தான மற்றும் சுவையான கேரட் கீர் எப்படி செய்வது என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.

Carrot Kheer (Photo Credit: YouTube)

மே 03, சென்னை (Kitchen Tips): கோடைகால வெயிலை தணிக்க நாம் கடைகளில் விற்கப்படும் பலவகையான ஐஸ் க்ரீம் மற்றும் குளிர்பானங்களை வாங்கி குடிப்பதற்கு பதிலாக, நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சுவையான தாகம் தீர்க்கும் குளிர்பானங்களை செய்து பருகலாம். அந்தவகையில், உடலுக்கு குளிர்ச்சியாக வீட்டில் உள்ள கேரட்டை பயன்படுத்தி சத்தான மற்றும் ஜில்லென்று கேரட் கீர் (Carrot Kheer) எப்படி செய்வது என்பதை இதில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

கேரட் - அரை கிலோ

ஏலக்காய் - 5

சர்க்கரை - 2 மேசைக்கரண்டி

காய்ச்சிய பால் மற்றும் தண்ணீர் - தேவையான அளவு

ஐஸ் கட்டி, பாதாம், ஆப்பிள், வாழைப்பழம், ஊற வைத்த சப்ஜா விதை (துளசி விதை). Nursing Student Suicide: நர்சிங் மாணவி தற்கொலை; விடுதி மாடியில் இருந்து குதித்து விவரீத முடிவு..!

செய்முறை:

முதலில் கேரட் தோலை நீக்கி, அதனை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பின்பு, அந்த கேரட்டை குக்கரில் போட்டு, கேரட் மூழ்கும் அளவில் தண்ணீர் ஊற்றி அதில் ஏலக்காய் மற்றும் சர்க்கரையை சேர்த்து குக்கரை மூடி அடுப்பில் வைத்து 4 விசில் விட்டு இறக்கிக்கொள்ள வேண்டும். பின்னர், வேக வைத்த கேரட்டை நீருடன் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும். பிறகு அதில் காய்ச்சிய ஆற வைத்துள்ள பாலை தேவையான அளவில் ஊற்றி 3/4 கப் சர்க்கரை சேர்த்து, அதனுடன் சிறிது ஐஸ் கட்டிகளையும் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். இதனையடுத்து, ஒரு பாத்திரத்தில் அரைத்ததை ஊற்றி, அதில் கீர் கெட்டியாக இருந்தால், தேவையான அளவு பால் அல்லது தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும். பின் பொடியாக நறுக்கிய பாதாம், ஆப்பிள், வாழைப்பழத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும், சப்ஜா விதைகளை சுமார் 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து கலந்துகொள்ளவும். அவ்வளவுதான் சத்தான சுவையான கேரட் கீர் ரெடி.