Nursing Student Suicide: நர்சிங் மாணவி தற்கொலை; விடுதி மாடியில் இருந்து குதித்து விவரீத முடிவு..!

கோயம்புத்தூரில் நர்சிங் மாணவி கல்லூரி விடுதியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Nursing Student Suicide: நர்சிங் மாணவி தற்கொலை; விடுதி மாடியில் இருந்து குதித்து விவரீத முடிவு..!
Suicide (Photo Credit: Pixabay)

மே 03, கோயம்புத்தூர் (Coimbatore News): கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மெய்யூரை சேர்ந்த செல்வம் என்பவரது மகள் பபிஷா (வயது 18). இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி (Nursing College) ஒன்றில், அதன் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். Vivo V30e: விவோ வி30e ஸ்மார்ட் போன் இந்தியாவில் விரைவில் அறிமுகம் - முழு விவரம் உள்ளே..!

இந்நிலையில், நேற்று முன்தினம் காலையில் பபிஷா, விடுதியின் 4-வது மாடி தளத்தில் இருந்து குதித்து தற்கொலை (Suicide) செய்துள்ளார். உடனடியாக, கல்லூரி நிர்வாகத்தினர் அவரை மீட்டு, அருகில் உள்ள கோவை தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பபிஷா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இச்சம்பவம் குறித்து சரவணம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மாணவி தற்கொலை செய்ததற்கான காரணம் பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், மாணவி பபிஷா காதல் தோல்வியால் தற்கொலை செய்தது கண்டறியப்பட்டது. இருப்பினும், தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நர்சிங் மாணவி திடீரென மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

(The above story first appeared on LatestLY on May 03, 2024 05:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).