Onion Powder Pajji Recipe: மழைக்கு இதமாக சுடச்சுட சுவையான வெங்காயத்தூள் பஜ்ஜி செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
மழைக்கு ஏற்ற சூடான சுவை மிகுந்த வெங்காயத் தூள் பஜ்ஜி எப்படி செய்வது என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.
மே 16, சென்னை (Kitchen Tips): பஜ்ஜி என்பது ஒரு சுவையான, மழை காலங்களில் விரும்பி உண்ணக்கூடிய ஸ்நாக்ஸ் ஆகும். பஜ்ஜியில் பல விதமான வகைகள் உள்ளன. அந்த வகையில் சுடச்சுட சுவையான வெங்காயத் தூள் பஜ்ஜி (Onion Powder Pajji) எப்படி செய்வது என்பது பற்றி இதில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 3 கப்
அரிசி மாவு - அரை கப்
பெரிய வெங்காயம் - 3
சீரகப்பொடி, பெருங்காயப்பொடி - தலா அரை தேக்கரண்டி
தனி மிளகாய்பொடி - 2 தேக்கரண்டி
பொரிக்க சமையல் எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு. RR Vs PBKS Highlights: ராஜஸ்தானின் பந்துகளை பஞ்சபஞ்சாய் பறக்கவிட்ட சாம் கரண்; அசத்தல் ஆட்டத்தால் பஞ்சாப் வெற்றி.!
செய்முறை:
முதலில் வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். பின்பு கடலைமாவு, அரிசிமாவு, உப்பு, 2 தேக்கரண்டி எண்ணெய், மிளகாய்தூள், பெருங்காயம், சீரகத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
பின்னர், வெட்டி வைத்த வெங்காயம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலக்கவும். வெங்காயம் மேல் மாவு படும்படி நன்கு கலந்துகொள்ள வேண்டும்.
அடுத்து, ஒரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடேற்றி, அதில் பிசைந்து வைத்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உதிர்த்தது அதில் போடவும்.
பின், நன்கு சிவந்து வந்ததும் அதனை எடுத்து விடவும். அவ்வளவுதான் மழைக்கு ஏற்ற சுடச்சுட சுவையான வெங்காயத் தூள் பஜ்ஜி ரெடி.