PBKS Vs RR (Photo Credit: @IPL X)

மே 16, கவுகாத்தி (Cricket News): ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 65வது ஆட்டம், நேற்று கவுகாத்தியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) அணி, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் சார்பில் விளையாடியவர்களில் ரியான் 34 பந்துகளில் 48 ரன்கள் அதிகபட்சமாக அடித்திருந்தார். ரவிச்சந்திரன் அஸ்வின் 19 பந்துகளில் 28 ரன்கள் அடித்திருந்தார். Unemployment Rate was Declines: இந்தியாவின் நகர்ப்புறங்களில் வேலையின்மை விகிதம் 6.7% குறைவு; ஆய்வில் வெளியான தகவல்.! 

பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி: எஞ்சிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறியதால், ராஜஸ்தான் அணி 144 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனையடுத்து, 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் (Punjab Kings PBKS) அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தாலும், சாம் கரண் அதிரடியாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அவர் நேற்றைய ஆட்டத்தில் 41 பந்துகளில் 63 ரன்கள் எடுத்திருந்தார். இறுதியில் பஞ்சாப் அணி 18.5 ஓவரில், ஐந்து விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய சாம் கரண் (Sam Curran) ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

மே 16ம் தேதியான இன்று மாலை 07:30 மணியளவில், ஹைதராபாத்தில் குஜராத் - ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தை ஜியோ சினிமா (Jio Cinema) செயலியில் நீங்கள் நேரலையில் கண்டு ரசிக்கலாம்.

சாமின் அதிரடி ஆட்டம்:

அசத்தல் ஆட்டம்: