Grape Pudding Recipe: சுவையான திராட்சை புட்டிங் செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடிய திராட்சை புட்டிங் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் காண்போம்.
ஏப்ரல் 30, சென்னை (Kitchen Tips): கோடைகாலங்களில் நாம் அதிகளவில் பழங்களை விரும்பி உண்போம். அந்தவகையில், திராட்சை பழத்தை வைத்து ஆரோக்கியமான மற்றும் சுவையான ஒரு புட்டிங் ரெசிபியை (Grapes Pudding)எப்படி செய்வது என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
திராட்சை – 4 கப்
சர்க்கரை – ஒரு கப்
தண்ணீர் – 5 கப்
சோளமாவு – அரை கப்
டூட்டி ஃப்ரூட்டி – 2 கைப்பிடி அளவு. Teeanager Murder: தகாத உறவில் ஈடுபட்ட மனைவி; வாலிபருக்கு அரிவாள் வெட்டு..!
செய்முறை:
முதலில் திராட்சையை நன்கு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். பின்னர், அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் திராட்சையை சேர்த்து, 5 கப் தண்ணீரை ஊற்றி நன்கு வேகவைத்துக் கொள்ளவும். பின்பு, அதனை மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். அதில் உள்ள சாறை ஒரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும். அடுத்து, அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடேற்றி அதனுள் நாம் வடிகட்டி வைத்துள்ள சாறினை கலந்துகொள்ள வேண்டும். பின்னர், அரை கப் சோள மாவினை சேர்த்து கொள்ளவும். அதனுடன் சர்க்கரையை சேர்த்துக் கொண்டு நன்கு கலந்துகொள்ள வேண்டும். நன்கு கெட்டியாக மாறிய பிறகு, அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதன் மேலே டூட்டி ஃப்ரூட்டியை பரவலாக தூவி குளிர் சாதன பெட்டியில் சுமார் 2 மணிநேரம் வைத்து, பின்னர், எடுத்து பார்த்தால் சுவையான திராட்சை ஃபுட்டிங் தயார்.