Banana Dosa Recipe: தித்திப்பான சுவையில் வாழைப்பழ தோசை செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!

அருமையான சுவையில் குழந்தைகள் விரும்பி உண்ணும் வகையில், வாழைப்பழ தோசை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் காண்போம்.

Banana Dosa (Photo Credit: YouTube)

ஜூன் 01, சென்னை (Kitchen Tips): வாழைப்பழத்தில் (Banana) பொதுவாகவே பொட்டாசியம் அதிகளவில் இருப்பதால், இது மூளையின் செயல்திறனை அதிகரிக்கின்றது. நல்ல மனநிலையில் வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும், நரம்புகளை சீராக வைத்துக்கொள்கிறது. வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம், ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக வைக்கிறது. இவ்வளவு பயன்களை கொண்ட வாழைப்பத்தை சற்று வித்தியாசமான முறையில், குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டி ஆக வாழைப்பழ தோசை (Vazhaippala Dosa) செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவர். இதனை எப்படி செய்வது என்பதனை இதில் பார்ப்போம். Afghanistan Boat Capsizes: ஆப்கானிஸ்தானில் படகு கவிழ்ந்து விபத்து; 20 பேர் நீரில் மூழ்கி பலி..!

தேவையான பொருட்கள்:

கனிந்த வாழைப்பழம் - 2

அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி

கோதுமை மாவு - 1 கப்

வெல்லம் - 100 கிராம்

ஏலக்காய் தூள் - கால் மேசைக்கரண்டி

தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் வாழைப்பழத்தை ஒரு மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். பின்பு, ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, வெல்லம் மசித்த வாழைப்பழத்தை சேர்த்துக்கொள்ளவும்.

இவற்றை நன்கு பிசைந்து அரிசி மாவு மற்றும் தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து, தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றி, அதில் கலந்து வைத்துள்ள மாவை ஒரு குழி கரண்டியில் எடுத்து, ஊற்றி சிறிது வெந்தபிறகு அதனைச் சுற்றி நெய் ஊற்றி திருப்பி போடவும்.

மேலும், சிறிது நெய் ஊற்றி சுட்டு எடுத்தால், அருமையான சுவையில் தித்திக்கும் வாழைப்பழ தோசை ரெடி.