Water Death (Photo Credit: @latestly X)

ஜூன் 01, காபுல் (World News): ஆப்கானிஸ்தானின் கிழக்கு நங்கர்ஹர் மாகாணத்தில் உள்ள பசோல் பகுதியில், இன்று (ஜூன் 01) காலை 7 மணியளவில் (02:30 GMT) பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் மொத்தம் 25 பேருடன் சென்றுள்ளது. அப்போது, ஆற்றைக் கடக்கும் போது படகு மூழ்கி (Boat Capsizes) விபத்துக்குள்ளானது. அதில், குழந்தைகள் உட்பட 20 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்று மாகாண இயக்குநர் குரைஷி பட்லோன் தெரிவித்தார். Realme C63: பட்ஜெட் விலையில் புதிய ரியல்மி சி63 ஸ்மார்ட் போன் அறிமுகம்..! விலை மற்றும் விவரக்குறிப்புகள் இதோ..!

இந்த விபத்தில் 5 பேர் உயிர் தப்பியதாகவும், அதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இதுவரை 1 ஆண், 2 பெண், 2 சிறுவர்கள் உட்பட ஐந்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக நங்கர்ஹார் சுகாதாரத் துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்த விவரங்களை அதிகாரிகள் இதுவரை வெளியில் தெரிவிக்கவில்லை. மேலும், மற்றவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே மேற்கொண்ட விசாரணையில், அங்கு வசிப்பவர்கள் கிராமங்களுக்கும் உள்ளூர் சந்தைகளுக்கும் இடையே பயணிக்க அடிக்கடி உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட படகுகளைப் பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பாலம் இல்லாத காரணத்தால், அவர்கள் அனைவரும் மிக மோசமான நிலையில் படகுகளைப் பயன்படுத்தி ஆற்றைக் கடக்கிறார்கள் என்று தெரியவந்தது.