IPL Auction 2025 Live

Karupatti Coffee Recipe: சளி, இருமலை விரட்டும் கருப்பட்டி காப்பி செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!

மழைக் காலங்களில் பருக கூடிய மிக முக்கியமான கருப்பட்டி காப்பி எப்படி தயார் செய்வது என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.

Karupatti Coffee (Photo Credit: IndiaMart.com)

மே 18, சென்னை (Kitchen Tips): சளி, இருமல், தொண்டை கரகரப்பு மற்றும் தொண்டைக்கட்டு போன்ற பிரச்சனைகளுக்கு ஓர் சிறந்த வைத்தியமாக சூடான ஒரு கப் கருப்பட்டி காபி (Karupatti Coffee) உள்ளது. இந்த காபியில் உள்ள மருத்துவ குணங்கள் உடனடி நிவாரணம் அளிக்கிறது. மேலும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, புத்துணர்ச்சியைப் பெற உதவுகிறது. அந்தவகையில், இவற்றை எப்படி தயார் செய்வது என்பதனை இதில் பார்ப்போம். Husband Suicide After Killed Wife: மனைவியை கொன்று செல்பி எடுத்த கணவர், தாவணியால் தூக்குப்போட்டு தற்கொலை..!

தேவையான பொருட்கள்:

தண்ணீர் - 1 கப்

சுக்கு பொடி - 1 தேக்கரண்டி

கருப்பட்டி - 1 மேசைக்கரண்டி

சுக்கு பொடி தயார் செய்ய:

உலர்ந்த இஞ்சி அல்லது சுக்கு தூள் - அரை கப்

மல்லி - 2 மேசைக்கரண்டி

சீரகம், மிளகு - 1 தேக்கரண்டி

பனங்கற்கண்டு - 3 மேசைக்கரண்டி

செய்முறை:

முதலில் சுக்கு பொடி தயார் செய்ய கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின், அதனை காற்றுப்புகாதவாறு ஒரு டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.

பின்னர், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதனை அடுப்பில் வைத்து, கொதிக்க வைத்து, அதில் சுக்குப் பொடி ஒரு தேக்கரண்டி மற்றும் கருப்பட்டியை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பிறகு, 2 முதல் 3 நிமிடங்கள் வரை மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும். அவ்வளவுதான் கருப்பட்டி காப்பி தயார்.