Pasta Payasam: பஞ்சாபி பாஸ்தா பாயாசம்... சுவையாக செய்வது எப்படி?.!

பஞ்சாபி பாஸ்தா பாயாசம் ரெசிபி எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

Pasta Payasam (Photo Credit: YouTube)

மார்ச் 18, சென்னை (Chennai): இனிப்பு என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் இன்றைய தலைமுறையினருக்கு பிஸ்சா, பிரைட் ரைஸ், காளான் போன்ற உணவுகள் மிகவும் பிடித்த உணவாகி விட்டது. அந்த வரிசையில் பாஸ்தாவும் ஒன்று. இதில் பாஸ்தாவை வைத்து பாயாசம் செய்வது பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பாஸ்தா - 1 கப்

பால் - 3 கப்

சர்க்கரை - 1/2 கப்

நெய் - 5 ஸ்பூன்

தேங்காய் துருவல் - 1/4 கப்

முந்திரி - 6

ஏலக்காய் - 3

செய்முறை: முதலில் பாஸ்தாவை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் தேங்காய் மற்றும் 4 முந்திரி சேர்த்து மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து நெய் உருகியதும் 2 முந்திரி சேர்த்து வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும். Lucknow Road Accident: அதிவேகமாக வந்த கார்.. இரண்டரை வயது குழந்தையை பலி வாங்கிய சம்பவம்..!

பின் ஒரு வானலியில் பாலை ஊற்றி பால் காய்ந்ததும் சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்க்க வேண்டும். சர்க்கரை கரைந்து 5 நிமிடங்கள் பால் சுண்டியதும் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து வேக வைத்த பாஸ்தாவை சேர்க்க வேண்டும். 10 நிமிடங்கள் நன்றாக கொதித்ததும் இறக்கினால் சுவையான பாஸ்தா பாயாசம் ரெடி!