Benefits Of Cumin Water: உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் சீரக தண்ணீரின் பயன்கள்..!
ரத்த சோகை மற்றும் உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் சீரக தண்ணீரில் உள்ள பயன்கள் பற்றி இந்த பதிவில் காண்போம்.
மே 04, சென்னை (Health Tips): நம் வீட்டில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் மிகவும் பயனுள்ள மருத்துவம் உள்ளது. அதில் குறிப்பாக, சீரகம் (Seeragam) நம் உடலை சீராக வைத்திருக்க உதவுகிறது. இதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி இதில் பார்ப்போம்.
சீரகம் கலந்த தண்ணீரை (Cumin Water) வெறும் வயிற்றில் குடித்து வந்தால் முகம், கூந்தல் அழகுக்கும் மற்றும் உடல் நலத்திற்கும் நல்லது. மேலும், பலவிதமான உடல்நலப் பிரச்னைகளுக்கும் இது இயற்கை தீர்வாக உள்ளது. சிறிது சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்று பிரச்சனைகளுக்கு நல்லது. மேலும், அஜீரணத்தில் இருந்து நிவாரணம் அளிக்கின்றது. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்னையிலிருந்து விடுவிக்கிறது. நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க சீரக தண்ணீர் பயன்படுகிறது. Young Girl Rape: வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம்; வாலிபர் கைது..!
உடலின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க மற்றும் சீரகநீர் சுவாச கட்டமைப்புக்கும், சளியைக் குணப்படுத்தவும் இது உதவும். இதில் பொட்டாசியம் அதிகமாக உள்ளதால், ரத்த அழுத்தத்தை சரிசெய்கிறது. உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றி, பித்தப்பையை பாதுகாத்து, கல்லீரலை பலம் பெறச் செய்கிறது. சரும அழகை பாதுகாக்க சீரகநீரை பயன்படுத்தலாம். அதில் பொட்டாசியம், கால்சியம், செலினியம், மாங்கனீஸ் போன்றவை உள்ளன. இவையனைத்தும் தோலுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது.
இதிலுள்ள இரும்புச் சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, உடலில் ரத்தசோகையை குணப்படுத்துகிறது. சுவாசக்குழாயில் உள்ள நோய்க்கிருமிகள் அழிந்து, சளி மற்றும் இருமலில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது. சீரக தண்ணீரை தொடர்ந்து பருகி வருவதால், ஞாபக சக்தி மற்றும் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க முடியும். மஞ்சள் தூளை சீரக தண்ணீருடன் கலந்து முகத்தை கழுவிவர முகம் பளபளக்கும், சருமம் மென்மையாக மாறும். மேலும், இளமை தோற்றத்தை அளிக்கும்.