Hair Fall: முடி உதிர்தல் பிரச்சனையை எதிர்கொள்ளும் இளம்பெண்கள்.. காரணம் என்ன?.. அதிர்ச்சி தகவல்.!

வீடு, அலுவலகம் என பணியாற்றி வரும் பெண்களிடம் நடந்த ஆய்வில், அவர்களில் 51% பேர் முடி உதிர்தல் பிரச்சனையை எதிர்கொண்டது தெரியவந்துள்ளது.

Hair Loss (Photo Credit: PIxabay)

ஜூலை 25, சென்னை (Health Tips): இன்றளவில் இளம் வயதிலேயே முடி உதிர்வது (Hair Loss) தொடர்பான பிரச்சனையை அதிகம் எதிர்கொள்கின்றனர். இந்த விஷயம் குறித்து தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று சுமார் 2.8 இலட்சத்திற்கும் அதிகமான பெண்களிடம் ஆய்வு நடத்தி இருந்தது. இந்த ஆய்வில் 71.19% பெண்கள் முடி உதிர்வு தொடர்பான பிரச்சனையை எதிர்கொள்வதாக கண்டறியப்பட்டுள்ளது.

51% பெண்களுக்கு முடி உதிர்தல் பிரச்சனை:

குறிப்பாக 36 வயது முதல் 40 வயது வரை இருக்கும் பெண்களில் 51% பேர் இதுசார்ந்த பிரச்சனையை எதிர்கொண்டுள்ளார். பதற்றம், மனஅழுத்தம் போன்றவை முடி உதிர்தலுக்கு காரணமாகவும் அமைந்துள்ளது. ஆண்களைப்போல பெண்களும் பல துறைகளில் கடுமையாக தங்களின் உழைப்பை வெளிப்படுத்தி வரும் நிலையில், வீட்டு வேலை, அலுவலக பணிகள் என திணறுகின்றனர். Egg Rice Recipe: வித்தியாசமான முறையில் முட்டை சாதம் செய்வது எப்படி..? விவரம் உள்ளே..! 

மனஅழுத்தத்திற்கான காரணங்கள்:

இதனால் முடி உதிர்வது தொடர்பான பிரச்சனையை எதிர்கொண்டு அவதிப்படுகின்றனர். இவர்களில் பலரும் முடி உதிர்தல் தொடர்பாக அதிகம் கவலைகளை எதிர்கொள்கின்றனர். இரத்தசோகை, பொடுகு, ஹார்மோன் கோளாறுகள், தூக்கமின்மை, மனஅழுத்தம் காரணமாகவும் முடி உதிர்வு ஏற்படுகிறது. உடல்ரீதியாக பல்வேறு மாற்றங்களை உண்டாக்கும் மனஅழுத்தம் தூக்கமின்மை, ஊட்டச்சத்து குறைவு, நொறுக்குத்தீனிகள் சாப்பிடுதல், புகைபிடித்தல், மதுப்பழக்கம் போன்றவை காரணமாகவும் ஏற்படுகிறது.

முடிஉதிர்வை குறைக்கும் வழிமுறைகள் சில:

இதனால் நொறுக்குத்தீனி பிரியர்கள் அதனை சாப்பிடுவதை கட்டுப்படுத்த வேண்டும். இது அவர்களின் உடலுக்கும் நல்லது. அதேபோல, உடற்பயிற்சி செய்தல், ஊட்டச்சத்து சார்ந்த உணவுகளை எடுத்துக்கொள்ளுதல், 30 நிமிடம் நடைப்பயிற்சி, யோகா, புத்தகம் படித்தல், இசையை கேட்டல் போன்றவை மனஅழுத்தத்தை குறைக்கும்.