ஜூலை 24, சென்னை (Kitchen Tips): முட்டை வைத்து எப்போதும் ஒரே மாதிரியான ஸ்டைலில் முட்டை சாதம் (Muttai Satham) செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால், புதுவிதமான முயற்சியில் முட்டையை வைத்து முட்டை சாதம் (Egg Rice) சுவையாக எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
முட்டை - 5
சின்ன வெங்காயம் - 150 கிராம் (தோல் நீக்கியது)
பெரிய வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
மிளகாய் தூள் - முக்கால் தேக்கரண்டி
மல்லி தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 5 சிட்டிகை
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
கிராம்பு - 6
பட்டை - சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது - ஒன்றரை தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
நெய் - 1 மேசைக்கரண்டி
பிரியாணி இலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு. Australian Woman Rape: ஆஸ்திரேலிய இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்; 5 ஆண்கள் மீது காவல்நிலையத்தில் பரபரப்பு புகார்..!
செய்முறை:
முதலில் முட்டைகளை வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதில் நீள் வாக்கில் கத்தியால் கீறி வைக்கவும். பின்னர், ஒரு பாத்திரத்தில் அரை தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடேற்றி, அதில் மஞ்சள் தூள், மிளகு தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இதில், கீறி வைத்த முட்டைகளை போடவும், அதில் மசாலா நன்கு படும்படி கிளறிவிட வேண்டும். பின்பு, அந்த முட்டைகளை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதே கடாயில், ஒரு தேக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கிராம்பு, பட்டை, மிளகு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். பிறகு, அதில் சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி கொள்ள வேண்டும்.
இதனை ஆற வைத்து, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பின்னர், ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடேற்றி, அதில் நெய், 2 மேசைக்கரண்டி எண்ணெய், பிரியாணி இலை, கிராம்பு, நறுக்கி வைத்த பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
வதங்கிய பிறகு, நறுக்கி வைத்த தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
இதில், பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். இதனுடன் அரைத்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். மேலும், அதில் மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
இதனை அடுப்பில் 2 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பின் அதனுடன் சாதம் சேர்த்து, மசாலாவுடன் சேர்த்து வைத்துள்ள முட்டை மற்றும் அதன் மேல் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான முட்டை சாதம் ரெடி.