Rice For Skin: செலவே இல்லாம அழகு தரும் அரிசி.. எப்படி எதற்கெல்லாம் பயன்படுத்தணும்?.!
முக அழகுக்கு வீட்டிலேயே செலவில்லாமல் என்ன செய்யலாம் என்று நினைப்பவர்களுக்கு எளிய வழி அரிசி தான்.
ஜனவரி 22, சென்னை (Chennai): பழங்கள், மாவுகளில் முகத்திற்கு ஃபேஸ்பேக் செய்வது இனி அரிசியை வைத்து ஃபேஸ்பேக் போடலாம். வீட்டிலேயே செய்யும் ஃபேஸ்பேக்கில் அரிசி மாவு சேர்ப்பது வழக்கம். இது முகத்தில் கருமை நீக்கி பொலிவு தரும். இதே போல சமைத்து சாதம் மற்றும் அரிசி தண்ணீரும் அழகிற்கு பல நன்மைகளை சேர்க்கிறது. கிளியரான கண்ணாடி போன்ற சருமம் வேண்டும் என நினைப்பவர்கள் ரைஸ் ஃபேஸ்பேக் முகத்தில் போடுவது சிறந்தது. இது இறந்த செல்கள், டேனை நீக்கி, சருமத்தில் கருமையை அகற்றி உடனடி பொலிவை தருகிறது. இந்த ரைஸ் ஃபேஸ்பேக் கொரியா மற்றும் ஜப்பானில் பாரம்பரியமாக பின்பற்றப்படும் அழகு குறிப்பாக உள்ளது. இந்த பேக்குகள் சருமத்தை உடனடியாகவும் நிரந்தரமாகவும் பொலிவு பெற வைத்து பளபளப்பாக்கிறது. PM Modi Sashtang Pranam Video: ராமர் கோயில் பிரதிஷ்டை விழா... ராமருக்கு தீபாராதனை காட்டி பூஜை செய்த பிரதமர் மோடி..!
2 ஸ்பூன் வேக வைத்த சாதம், 1 ஸ்பூன் பால், மற்றும் அரை உருளைக்கிழங்கு மற்றும் ¼ ஸ்பூன் எலுமிச்சைச் சாறு இவைகளை ஒன்றாக அரைத்து பேஸ்ட் பதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் இதை முகத்தில் தடவி 10 நிமிடத்திற்கு விட வேண்டும் இதை ஈரத்துணியால் லேசாக துடைத்து எடுக்க வேண்டும். இது சருத்திற்கு இன்ஸ்டண்ட் ஒயிட்னிங்கைத் தரும்.
3 ஸ்பூன் நன்கு குழைந்த சாதம், அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் இந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடத்திற்கு பின்னர் முகத்தை கழுவி விட வேண்டும். இதன் பின் அரிசி கழுவின தண்ணீரில் பஞ்சை நனைத்து கருவளையம், தழும்புகள் இருக்கும் இடம் அல்லது அன்னீவன் டோனான இடத்தில் வைக்க வேண்டும். 10 நிமிடத்திற்கு பின் இவைகளை எடுத்து கழுவி விடலாம். இவைகள் முகத்தின் நிறத்தை அதிகரிப்பதோடு ஈவன் நிறத்தையும் வழங்கும்.
3 ஸ்பூன் அரிசியை வேக வைத்த தண்ணீர்(கஞ்சி), ½ ஸ்பூன் கோதுமை மாவு, 1 ஸ்பூன் தயிர் ஆகியவையை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். இது முகத்தில் தடவி 15 நிமிடத்திற்கு பின் கழுவ வேண்டும். முகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் தோல் சுருக்கத்தை சரி செய்யவும் பயன்படுகிறது. Atal Setu Bridge Accident: அதிவேகத்தால் காத்திருந்த விபத்து; அதிஷ்டத்தால் தப்பிய உயிர்கள்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ.!
எந்த ஃபேஸ்பேக் போடுவதாக இருந்தலும் அதில் சிறிதளவும் அரிசி கழுவின தண்ணீரை சேர்த்த கொள்ளலாம். இது நிறத்தை அதிகரிக்க உதவும். தினமும் காலை முகத்தை அரிசி தண்ணீரில் கழுவதும் நல்லது.
அரிசி தண்ணீரில் அழகு: அரிசி ஊறவைத்த தண்ணீர் 2 ஸ்பூனையும், அதில் 1ஸ்பூன் பாலையும் சேர்த்து முகத்தில் தினமும் கிளன்சராக பயன்படுத்தலாம்.
அரிசி கழுவிய தண்ணீர் 1 ஸ்பூன், 1 ஸ்பூன் கற்றாழை ஜெல், 1 ஸ்பூன் ரோஸ் வாட்டர், 3 துளி விட்டமின் ஈ அல்லது பாதாம் எண்ணெய் இவைகளை ஒரு நிமிடத்திற்கு விடாமல் கலக்க வேண்டும். அதன்பின் இதை முகத்தில் தடவி 10 நிமிடத்திற்கு பின் கழுவி விடலாம். பின் டோனரைப் பயன்படுத்த வேண்டும். இது சருமத்தை நீரேற்றமாக வைத்து பொலிவைத் தருகிறது.
அரிசி ஊற வைத்த தண்ணீரை வடித்து சேமித்து, டோனராக தினமும் பயன்படுத்தலாம். இது கரும்புள்ளிகளை 30 நாட்களுக்குள் மறையசெய்து விடும்.